- Advertisement -
Homeபொழுதுபோக்குவிமர்சனங்களை எதிர்கொள்ளாத தவெக அரசின் இந்த மிரட்டல்களுக்கு திமுக எப்போதுமே அஞ்சாது - திமுக கூட்டத்தில்...

விமர்சனங்களை எதிர்கொள்ளாத தவெக அரசின் இந்த மிரட்டல்களுக்கு திமுக எப்போதுமே அஞ்சாது – திமுக கூட்டத்தில் திவ்யா சத்யராஜ் ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வில்லனாக நடித்து பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சத்யராஜ். இப்போது வயது 70 வயதுகளை கடந்த நிலையில் அவர் கடந்த 10, 15 ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு அப்பாவாக நடித்து வருகிறார் சத்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் நீண்ட காலமாகவே திமுகவின் ஆதரவாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ் கண்ணீர் விட்டு அழுதார். இது இணையத்தில் வைரலானது. அதற்கு முன்பு திமுக கூட்டங்களில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராகவும் சத்யராஜ் பேசினார்.

- Advertisement -

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த ஆண்டு திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவருக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே திவ்யா சத்யராஜ் தமிழக வெற்றிக்கழகம் கட்சித் தலைவர் விஜயை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

தொடர்ந்து தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகும் திவ்யா சத்யராஜ் தொடர்ந்து விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். சென்னையில் நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திவ்யா சத்யராஜ் பேசியதாவது, இப்போது தமிழ்நாட்டில் தவெக அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை அடக்குவதற்கு என்றே ஒரு தனிப்படை செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களை 3 மணி நேரத்துக்கு தேடிப்பிடித்து கைது செய்வது போன்ற விளம்பர அரசியலில் மட்டுமே வேகம் காட்டி வருகிறது. விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இந்த அரசு பயப்படுகிறது.

மக்களாட்சியில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவமும் அரசுக்கு வேண்டும். அதை விடுத்து அதிகார பலத்தை பயன்படுத்தி மாற்று கருத்து உடையவர்களை அச்சுறுத்தக் கூடாது. இந்த மிரட்டலுக்கெல்லாம் திமுக கட்சி என்றும் அஞ்சாது. மக்களின் உண்மையான உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று திவ்யா சத்யராஜ் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்