- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சத்யராஜ் அரசியல் நையாண்டி செய்த மாஸ் ஹிட் படம்… 32 ஆண்டுகளுக்கு பின் விரைவில்...

நடிகர் சத்யராஜ் அரசியல் நையாண்டி செய்த மாஸ் ஹிட் படம்… 32 ஆண்டுகளுக்கு பின் விரைவில் ரி ரிலீஸ் – தேர்தல் களம் இப்பவே சூடு பிடிக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அரசியல் சார்ந்த பல படங்கள் வெளிவந்து மக்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றிருக்கின்றன. பொதுவாக அந்த படங்களில் அரசியல்வாதி செய்யும் அநியாயங்களும் அக்கிரமங்களும் மட்டுமே கதையில் சில காட்சிகளாக வரும். ஆனால் அரசியல்வாதியின் வாழ்க்கையே சில படங்கள்தான் வந்துள்ளன.

அந்த வகையில் நடிகர் சத்யராஜ் நடித்த படங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் அமைதிப்படை. கடந்த 1994ம் ஆண்டில் இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சத்யராஜ் 2 வேடங்களில் நடித்திருந்தார். இதில் நாகராஜசோழன் எம்ஏ வாகவும் போலீஸ்காரராகவும் சத்யராஜ் நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் ரஞ்சிதா கஸ்தூரி சுஜாதா மணிவண்ணன் ஆர் சுந்தர்ராஜன் மீசை முருகேஷ் தியாகு காந்திமதி எஸ்எஸ் சந்திரன் அல்வா வாசு என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் அமாவாசை கேரக்டரில் அரசியல்வாதியாக சத்யராஜ் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. ஆனால் இந்த படம் 2ம் பாகமாக நாகராஜ சோழன் என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு பின் வெளியாகி வெற்றியை பெறவில்லை.

அமைதிப்படை படம் அன்றைய அரசியல் சூழல், அரசியல்வாதிகளின் உண்மையான நடவடிக்கைகள் அவர்களின் அரசியல் சூதாட்டங்களையும் சொல்லும் கதைக்களமாக இருந்தஆ. குறிப்பாக தமிழகத்தில் அன்றைய அரசியல் நிலையை நையாண்டி செய்திருந்தது. குறிப்பாக வசனங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

- Advertisement -

நடிகர் சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணியில் வந்த பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும் அமைதிப்படை படம்தான் சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவருக்குமே ஒரு திருப்புமுனை படமாக இருந்தது. இதன்பிறகுதான் மணிவண்ணன் பல படங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு குணச்சித்திர நடிகராகவும் மாறினார்.

இப்போது 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைதிப்படை படம் வெளியாவது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற அதிக வாய்ப்புள்ளது. 32 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த படம் இப்போது புதிய தொழில்நுட்பங்களுடன் விரைவில் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் அமைதிப்படை படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

- Advertisement -

சற்று முன்