- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் நடித்த அமரன், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர்… விரைவில் ஓடிடி தளங்களில் ரிலீஸாகிறது...

சிவகார்த்திகேயன் நடித்த அமரன், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர்… விரைவில் ஓடிடி தளங்களில் ரிலீஸாகிறது – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தந்த படம் அமரன். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அமரன் படம் வெளியான 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்தது.

அதன்பிறகு 10 நாட்களில் அமரன் படம் ரூ. 200 கோடி வசூலை கடந்தது. இதுவரை 24 நாட்களில் உலகம் முழுவதும் 310 கோடி ரூபாய் வசூலை கடந்து பெரிய வசூல் சாதனையை புரிந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அமரன் படமே அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது.

- Advertisement -

அதே போல் தீபாவளிக்கு வெளியான மற்றொரு படம் லக்கி பாஸ்கர். தெலுங்கு மொழியில் உருவான இந்த படம், தமிழில் டப்பிங் செய்து வெளியானது. ஆனால் தெலுங்கு படங்களுக்கு உரிய மசாலாதனங்கள் எதுவுமில்லாத ஒரு இயல்பான படமாக இருந்தது. இந்த படத்தில் வன்முறை, ஆக்சன் எதுவுமே இல்லாத நிலையிலும் படம் அபார வெற்றி பெற்றது.

தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்த படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு மனைவியாக தி கோட் படத்தில் விஜய்க்கு காதலியாக நடித்திருந்த மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு மீனாட்சி செளத்ரிக்கு நிறைய இருந்தது.

- Advertisement -

சித்தாரா எண்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் 24 நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். அமரன் படத்துக்கும் இசை ஜீவி பிரகாஷ்குமார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 நாட்களில் லக்கி பாஸ்கர் படம் 111 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.

தற்போது அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்களில் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி லக்கி பாஸ்கர் படம் வருகிற 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அமரன் படமும் நெட்பிளிக்ஸ் தளத்தில்தான் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ரூ. 60 கோடிக்கு வாங்கியதாக தெரிகிறது. வருகிற டிசம்பர் 5ம் தேதி அல்லது 11ம் தேதியன்று அமரன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

சற்று முன்