- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல பாலிவுட் நட்சத்திரங்களுடன் போட்டோ ஷூட் எடுத்த நடிகர் சூர்யா... ஓஹோ இதுதான் காரணமா?...

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுடன் போட்டோ ஷூட் எடுத்த நடிகர் சூர்யா… ஓஹோ இதுதான் காரணமா?…

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தை, சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக திஷா பாண்டே நடித்திருக்கிறார். யோகி பாபு, கோவை சரளா, நட்டி, ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதன் சூட்டிங் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

தற்போது சூர்யாவின் போர்ஷன்கள் முடிவு பெற்றுள்ள நிலையில், மீதம் சில காட்சிகள் படம் பிடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன் ஜென்ம கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறதாம். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா வாடிவாசலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருப்பதால் அதன் பணிகள் தள்ளிப் போகிறது.

- Advertisement -

இதன் நடுவில் அவர் சுதா கொங்கரா உடன் மீண்டும் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணி சூரரை போற்று திரைப்படத்தை எடுத்தது. திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்காக சூர்யா தேசிய விருதையும் பெற்றார்.

இந்த நொடியில் தற்போது மீண்டும் அவர் சுதா கொங்கரா உடன் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு, புறநானூறு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் டைட்டிலில் இரண்டாம் பகுதி தான் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி ஏதோ ஒரு குறிப்பிட்ட வருடத்தை குறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் சூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்கப்படுகிறதாம்.

- Advertisement -

இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த சுதா கொங்கரா திட்டமிட்டு உள்ளார். பிறகு சிதம்பரம் திருச்சி ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இப்படியான சூழலில் நடிகர் சூர்யா, பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப்பச்சன் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோருடன் போட்டோ சூட் எடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்னும் பத்து ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில அணிக்கும் நடிகர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பை அணிக்கு அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணிக்கு சூர்யா பொறுப்பாளராக இருக்கிறார். இதேபோல் அக்ஷய்குமார், கிருத்திக் ரோஷன், ராம்சரண் உள்ளிட்டோரும் இந்த பொறுப்பில் வகிக்கின்றனர். இப்படியான சூழலில் அமிதாபச்சன் அக்ஷய் குமார் சூர்யா ஆகியோர் கிரிக்கெட் தொடரை விளம்பரப்படுத்துவதற்காக போட்டோ சூட் எடுத்துள்ளனர். இதனிடையே சூர்யா இந்தி திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்தான் என்றும், அதில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிப்பதாகவும் தெரிகிறது. இதனை சுதா கொங்கரா இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்