தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வருபவர்கள் குஷ்பு – சுந்தர் சி. இந்த தம்பதியின் மகள்கள் அனந்திகா மற்றும் அவந்திகா. இதில் அனந்திகா ஏற்கனவே ஒரு மலையாள படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அவந்திகா டபுள் ஆக்குபன்சி என்ற படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.
இவர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பணி செய்திருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குனராக உள்ள சுந்தர் சி தயாரிப்பாளராகவும் உள்ளார். குஷ்புவும் சுந்தர் சியும் இணைந்து அவ்னி மூவி மேக்கர்ஸ் என்ற பெயரில் பல திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். பல டிவி நிகழ்ச்சிகளையும் இந்த நிறுவனம் வாயிலாக குஷ்பு தயாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு மகள் நடிகையாக ஒரு மகள் தயாரிப்பாளராக சினிமாவில் களத்தில் இறங்கி விட்டனர். இந்நிலையில் நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ். இவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் சொந்தமாக தயாரித்து அவரே டைரக்ட்டும் செய்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. சுமார் 13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. அதன்பிறகு நடிகர் பவிஷ் லவ்வோ லவ்வு என்ற தனது 2 படத்தில் நடித்துள்ளார்.
அடுத்து அவர் அட்டாக்கர் என்ற தனது 3வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உருவாகும் ஒரு பீரியட் படமாகும். கடந்த 1980களில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகிறது. இந்த படம் வாலிபால் விளையாட்டை மையப்படுத்திய கதையில் திரைப்படமாகிறது.
இந்த படத்தில் நடிகர் பவிஷூக்கு ஜோடியாக நடிக்கப் போவது நடிகை குஷ்பு – சுந்தர் சியின் மூத்த மகள் அனந்திகா தான். மலையாள படத்தை தொடர்ந்து 2வது படமாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இயக்குனர் பா ரஞ்சித்திடம் அசோசியேட் ஆக பணிபுரிந்த ஒருவர்தான் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.





