- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கு பட டைரக்டர் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படம், கதாநாயகியாக கமிட் ஆன மலையாள...

தெலுங்கு பட டைரக்டர் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அடுத்த படம், கதாநாயகியாக கமிட் ஆன மலையாள நாயகி – பேரை கேட்டாலே சும்மா தெறிக்குதே?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் வருகிற மே 1ம் தேதி ரெட்ரோ படம் ரிலீஸாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து ஜனநாயகன் காஞ்சனா 4 படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

இப்போதெல்லாம் ஹீரோவை போலவே ஹீரோயினுக்கும் ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் நயன்தாரா திரிஷா கீர்த்தி சுரேஷ் அனுஷ்கா பூஜா ஹெக்டே என குறிப்பிட்ட சில நாயகிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர்களும் சரியான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கின்றனர்.

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் ஏற்கனவே நடிக்க கமிட் ஆகி 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கங்குவா படத்துக்கு பிறகு வாடிவாசல் படத்தில்தான் சூர்யா நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் விடுதலை 2 படத்தில் அதிக நாட்களை வெற்றிமாறன் செலவிட்டு விட்டார்.

அதனால் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்திலும் அடுத்து நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடித்து வரும் நடிகர் சூர்யா, இன்னும் வாடிவாசல் படப்பிடிப்பு துவங்க சில மாதங்கள் ஆகும் என்பதால் அதற்குள் குறுகிய கால படைப்பாக தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.

- Advertisement -

தனுஷ் நடித்த வாத்தி துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கும் ஒரு புதிய படத்தில் சூர்யா அடுத்து நடிக்க உள்ளார். இந்த படம் சூர்யாவின் 46வது படமாக இருக்கும். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை 3 மாதங்களுக்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே இந்த படத்தில் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்போது இந்த படத்தில் 2வது முறையாக சூர்யா கீர்த்தி சுரேஷ் ஜோடி இணைய உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்