- Advertisement -
Homeபொழுதுபோக்குகவின் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு இப்படி ஒரு கேரக்டரா, போடு வெடிய -...

கவின் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஆண்ட்ரியாவுக்கு இப்படி ஒரு கேரக்டரா, போடு வெடிய – அப்ப இனியாவது சான்ஸ் நெறையா வருமா?

- Advertisement -

நடிகை ஆ்ண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். கௌதம் மேனன் இயக்கிய இந்த படத்தில், சரத்குமார் மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஜோதிகா வேற லெவலில் ஒரு வித்யாசமான கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படம் அதிரடி ஆக்சன், திரில்லர் படமாக வெற்றி பெற்றது.

தொடர்ந்து வடசென்னை, தரமணி, விஸ்வரூபம், அரண்மனை 2, மங்காத்தா, ஆயிரத்தில் ஒருவன், ஒரு கல் ஒரு கண்ணாடி, துப்பறிவாளன், மாஸ்டர், விஸ்வரூபம் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் ஆண்ட்ரியா. சமீபத்தில் அவர் நடித்த படம் வட்டம். வெப் சீரிஸ்களிலும் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

- Advertisement -

ஆண்ட்ரியா நல்ல நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகியாகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். வேட்டையாடு விளையாடு படத்தில் காக்க காக்க பாடலையும், புஷ்பா படத்தில் செம டிரண்டிங் பாடலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை பாடியவரும் ஆண்ட்ரியா தா்ன். அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை பாடியதும் இவர்தான். மதராசப்பட்டணம் படத்தில் பூக்கள் பூக்கும் தருணம் பாடலை பாடியதும் ஆண்ட்ரியாதான்.

நடிகை, பாடகி மட்டுமின்றி ஆண்ட்ரியாவுக்கு மற்றொரு முக்கிய அடையாளமும் உள்ளது. அது, ஆண்ட்ரியாக ஒரு டப்பிங் கலைஞர். பின்னணி குரல் கொடுப்பவர். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலினி முகர்ஜிக்கும், ஆடுகளம் படத்தில் டாப்சிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரல் கொடுத்தது ஆண்ட்ரியா தான். ஆனால் பலருக்கும் ஆண்ட்ரியாவை நடிகையாக மட்டுமே தெரியும். அவர் பாடகி, டப்பிங் கலைஞர் என்கிற விஷயங்கள் பலருக்கும் தெரியாது.

- Advertisement -

இந்நிலையில் வளர்ந்துவரும் நடிகராக தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் கவின். டிவி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பரிச்சயமான கவின், விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியாளராக பங்கேற்றார். அந்த வகையில் இன்னும் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகமும், வரவேற்பும் கிடைத்தது. தொடர்ந்து டாடா, லிப்ட் படங்களில் நடித்து பிரபலமான நடிகரான கவின் தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இப்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

புதுமுக இயக்குனர் ஒருவரது இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் ஹீரோயின் இவரல்ல. வேறு ஒருவர் நடிக்கிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா பெண் தாதா வேடத்தில் வில்லியாக நடிக்கிறார். இதுவரை அவர் ஏற்காத புதிய கேரக்டர் என்பதால் இந்த படத்துக்கு பிறகு, ஆண்ட்ரியாவுக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வரலாம்.

- Advertisement -

சற்று முன்