- Advertisement -
Homeபொழுதுபோக்குகவின் படத்துக்கு இசையமைக்க மறுத்து வெளியேறிய அனிருத், உண்மையான காரணம் அதுவல்ல - வெளிச்சத்துக்கு வந்தது...

கவின் படத்துக்கு இசையமைக்க மறுத்து வெளியேறிய அனிருத், உண்மையான காரணம் அதுவல்ல – வெளிச்சத்துக்கு வந்தது உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு இசையமைப்பாளர் பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. எம்எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி இளையராஜா ஏஆர் ரகுமான் யுவன் சங்கர் ராஜா அனிருத் என அந்தந்த காலகட்டத்தில் அவர்களது இசையும் பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றன.

அந்த வகையில் சமீபகாலமாக இசையமைப்பாளர் அனிருத் இசைக்கும் அவரது இசையில் உருவாகும் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. குறிப்பாக கடந்தாண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக இருந்ததே அனிருத்தின் இசைதான் என்பதை ரஜினிகாந்தே மேடையில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதனால் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள், பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு அனிருத் படு பிஸியாக இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இப்போது தளபதி 69 கூலி ஜெயிலர் 2 என 11க்கும் மேற்பட்ட படங்களுக்கு அனிருத் இசையமைக்க கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் நடிகர் கவின் நடித்து வரும் கிஸ் என்ற படத்துக்கு அனிருத் இசையமைக்க கமிட் ஆன நிலையில், திடீரென அந்த படத்தில் இருந்து அவர் விலக்கப்பட்டார். ஆனால் அந்த படத்தில் இருந்து அவரை படக்குழு விலக்கவில்லை. அவராகவே இந்த படத்துக்கு இசையமைக்க முடியாது என விலகி விட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படம்தான் கிஸ். இந்த படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. காதல் கதைக்களத்தில் உருவான இந்த படத்துக்கு இப்போது அனிருத்துக்கு பதிலாக பிளடி பெக்கர் படத்துக்கு இசையமைத்த ஜென் மார்டின் என்பவர் இசையமைக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.

கிஸ் படத்தில் இருந்து இசையமைக்காமல் அனிருத் விலக காரணம், தன் கைவசம் 11 படங்கள் இருப்பதால், இந்த படத்துக்கு இசையமைக்க நேரமில்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் ஜெயிலர் 2 படத்துக்கு ரூ. 17 கோடி சம்பளம் கேட்ட அனிருத், குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் கிஸ் படத்தில் சம்பளம் அதிகமாக கிடைக்காது என்பதால்தான், இசையமைக்க விருப்பமின்றி விலகி விட்டதாக இப்போது ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்