சினிமாவுக்குள் இயக்குனராக இசையமைப்பாளராக ஒளிப்பதிவாராக வரும் பலரும் ஒரு கட்டத்தில் நடிகராகி விடுகின்றனர். இதில் இயக்குனர்கள் தான் அதிகளவில் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுச் சொல்லலாம். இளவரசு நட்டி நடராஜ் ராஜீவ் மேனன் போன்றவர்கள் ஒளிப்பதிவாளர்கள்தான். அதே போல் இசையைமப்பாளர்கள் ஜீவி பிரகாஷ்குமார் விஜய் ஆண்டனி நடிகர்களாகி விட்டனர்.
அதே வரிசையில் விரைவில் தேவி ஸ்ரீ பிரசாத்தும் விரைவில் சினிமாவில் ஹீரோவாக நடிக்க உள்ளார். தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் மகன் அக்சய் குமாரும் ஹீரோவாகி விட்டார். எனவே சினிமாவில் வருபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நடிகர் வாய்ப்பை பெற்று விடுகின்றனர்.
அந்த வகையில் ஜீவி பிரகாஷ்குமார் விஜய் ஆண்டனியை தொடர்ந்து இசையமைப்பாளர் வரிசையில் அனிருத்தும் நடிகராகி விடுவாரா என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்தர் ஒரு திரைப்பட நடிகர்தான்.
அவர் விசு இயக்கிய வரவு நல்ல உறவு வேடிக்கை என் வாடிக்கை என பல படங்களில் நடித்தவர் தான். சமீபத்தில் கூலி படத்தில் கூட ஒரு காட்சியில் ரவி ராகவேந்தர் நடித்திருந்தார். அதனால் அப்பா வழியில் அனிருத்தும் ஒரு நடிகராக அதிக வாய்ப்புள்ளது. நிறைய இயக்குனர்களின் தொடர்பில் உள்ள அனிருத் ஓகே சொன்னால் அவரை ஹீரோவாக்க பலரும் தயாராக உள்ளனர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இசையமைப்பாளர் அனிருத் கூறியதாவது, லோகேஷ் கனகராஜிடம் நீங்கள் ஹீரோவாக நடியுங்கள். ஆனால் அதை நான் எப்போதும் பண்ண மாட்டேன் என்று சொன்னேன். எனக்கு இசை தான் மிகவும் பிடித்துள்ளது. 15 ஆண்டுகளில் ரசிகர்கள் மிகப்பெரிய உயரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இசையில் இன்னொரு ரவுண்டு நான் போக வேண்டும் அதற்கு 15 ஆண்டுகள் போதாது.
நான் இசையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். ஆகையால் இப்போதைக்கு நான் இசை சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் சினிமா பிரமோ ஆகியவற்றில் மட்டுமே தோன்றுவேன் என்று அனிருத் கூறியிருக்கிறார். இப்போது ஜெயிலர் 2 தி பாரடைஸ் எல்ஐகே ரஜினி கமல் நடிக்கும் படம் ஜனநாயகன் டிசி அரசன் ரஜினி 173 உள்ளிட்ட பல படங்களுக்கு அனிருத் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





