- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாராவுக்கு இரக்கம் காட்டாத வருண பகவான், ரசிகர்களாவது கவனம் காட்டுவார்களா? - ஓடிடி தளத்தில் ஐந்து...

நயன்தாராவுக்கு இரக்கம் காட்டாத வருண பகவான், ரசிகர்களாவது கவனம் காட்டுவார்களா? – ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகும் அன்னபூரணி

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் நடிகை நயன்தாரா. முதலில் இந்த பட்டம், தெலுங்கு சினிமாவில் நடித்த விஜயசாந்திக்கு தான் இருந்தது. அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி ஓய்வு பெற்றுவிட்டதால், நயன்தாராவுக்கு அந்த பட்டம் வந்துவிட்டது. ஆனால் இந்த பட்டம் எனக்கு வேண்டாம். பலரும் திட்டுகிறார்கள் என கூறியிருக்கிறார் நயன்தாரா.

இம்மாதம் 1ம் தேதி வெளியானது நயன்தாரா நடித்த அன்னபூரணி. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் இந்த படம் வெளியான ஓரிரு தினங்களில் சென்னை மற்றும் அது சார்ந்த திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை. மிக்ஜம் புயல் காரணமாக தொடர் கனமழையால் வெள்ளக் காடுகளாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும் மாறியது.

- Advertisement -

இந்த கன மழையால் பாதிக்கப்பட்டது மக்கள் மட்டுமல்ல. அந்த நெருக்கடியான நேரத்தில் வெளியான சில படங்களும்தான். இதில் நயன்தாரா நடித்த அன்னபூரணி, தர்ஷன் மற்றும் மகிமா நம்பியார் நடித்த நாடு மற்றும் ஹரீஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் ஆகிய 3 படங்களும் ரிலீஸ் ஆகியிருந்த நிலையில், இந்த படங்களுக்கு சில காட்சிகளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்த படங்களை காண செல்லலாம் என ரசிகர்கள் நினைத்த போது மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்துக்கொண்டது.

கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழலில், தியேட்டர் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்தது. தியேட்டர்களிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் படங்களை திரையிட முடியவில்லை. சில தியேட்டர்களில் படங்கள் திரையிட்டாலும் மழை வெள்ளம் காரணமாக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வரமுடியாமல் போனது. அதனால் நல்ல விமர்சனம் இருந்தும் அன்னபூரணி, நாடு, பார்க்கிங் ஆகிய படங்கள் ரசிகர்கள் வருகையின்றி, வசூலில் பலத்த ஏமாற்றத்தை தந்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நயன்தாராவுக்கு அன்னபூரணி 75வது படம். பிராமண வீட்டுப் பெண்ணாக, சமையலில் போட்டியிட்டு வெற்றி பெறும் கேரக்டரில் நடித்த அவரது நடிப்பு, பலரையும் கவர்ந்தது. சத்யராஜ், ஜெய், சுரேஷ் சக்ரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி நடித்திருந்த இந்த படத்தை நயன்தாரா, மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்திருந்தார். கடைசியில் போட்ட முதலீட்டை கூட எடுக்க முடியாத மோசமான நிலைக்கு படத்தின் தயாரிப்பாளர் தள்ளப்பட்டார் என்பதுதான் கசப்பான உண்மை.

அன்னபூரணி படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி 4 வாரங்கள் கடந்த நிலையில், வரும் 29ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. வரும் 29ம் தேதியன்று அன்னபூரணி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் அன்னபூரணி மீண்டும் ரசிகர்களை சந்திக்க ஓடிடி தளம் வழியாக வருகிறாள். வருணபகவான் கருணை காட்டாததால், தியேட்டர்களுக்கு வராத ரசிகர்கள், ஓடிடி தளத்திலாவது போதிய ஆதரவு தருவார்களா என்பதுதான் இப்போது அந்த படக்குழுவினரின் கேள்வியாக, எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்