- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் ராஷ்மிகா நம்பி அவரை நம்பி ஏமாந்து விட்டனர், தனுஷூக்கு விருது கிடைக்காமல் போனால், அதற்கு...

தனுஷ் ராஷ்மிகா நம்பி அவரை நம்பி ஏமாந்து விட்டனர், தனுஷூக்கு விருது கிடைக்காமல் போனால், அதற்கு காரணமே அவர்தான் – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான படம் குபேரா. தனுஷ் ராஷ்மிகா மந்தனா நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எனினும் தமிழில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்பதே உண்மை. குறிப்பாக கதை திரைக்கதை சொதப்பி விட்டதாக பலரும் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் குபேரா படம் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, குபேரா படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா தனுஷை ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தனுஷ் ஒரு மாஸ் ஹீரோ. அவரை படம் ஆரம்பிக்கும் போதே பிச்சைக்காரனாக காட்டிவிட்டு கடைசியில் பல கோடிக்கு அதிபராக காட்டி இருக்கிறார் இயக்குனர்.

- Advertisement -

தனுஷ் எதுவுமே தெரியாதவராக இருந்தாலும் படித்த பெண் ராஷ்மிகாவுடன் அவர் சேர்ந்த பிறகு அந்த பணத்தை வைத்து பிச்சைக்காரர்களுக்கு என்ன செய்கிறார் என்று கதையை நகர்த்தி இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு ஏதோ ஒரு காவியம் போல் படைக்கிறேன் என்று படத்தை மொத்தமாக சேகர் கம்முலா காலி செய்து விட்டார்.

குபேரா படத்தில் அட்டகாசமான நடிப்பை தந்திருக்கிறார் தனுஷ். பல காட்சிகளில் அவரது நடிப்பு பிரமாதமாக உள்ளது. இந்த படத்தில் நடித்த அவருக்கு விருது கிடைக்கலாம். ஆனால் படம் வெற்றி பெற்று விருது கிடைத்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வாய்ப்பை இயக்குனரே கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நாகர்ஜூனா கேரக்டர் நல்லவனா கெட்டவனா என்பதை சரியாக கடைசி வரை சொல்லவில்லை.

- Advertisement -

ஆனால் நாகார்ஜூனா நடிப்பை தெலுங்கு ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள். தெலுங்கிலும் குபேரா படத்தின் வசூல் நன்றாக இருக்கிறது. ஆனால் தமிழில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை. ராஷ்மிகா மந்தனாவுக்கும் சரியான கேரக்டர் கொடுக்கப்படவில்லை. அவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கும்போது அவரது மேக்கப்பையும் டல்லாகி அவருக்கு அழுத்தமான கேரக்டரும் கொடுக்காமல் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் போல அவரை நடிக்க வைத்திருக்கிறார் சேகர் கம்முலா.

இது ராஷ்மிகாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக போய்விட்டது. இந்த படத்தால் ராஷ்மிகாவுக்கு இனி வரும் படங்களில் சம்பளத்தை குறைக்கவும் வாய்ப்புள்ளது. தனுஷ் ராஷ்மிகா இருவருமே சேகர் கம்முலா மிகப்பெரிய டைரக்டர் என்று நம்பி ஏமாந்து விட்டார்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்