தமிழ் சினிமாவின் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் விஜய். அவர் கடைசியாக நடித்த வாரிசு படம் விமர்சன ரீதியாக மொரட்டு அடி வாங்க வசூல் ரீதியாக 300 கோடி ரூபாயை தொட்டுவிட்டதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் விஜய்க்கு வாரிசு ரிசல்ட கொஞ்சம் அப்செட்தான். ஏனெனில் வாரிசுக்கு போட்டியாக களமிறங்கிய துணிவு படம் கண்டெண்ட் ரீதியாக வென்றுவிட்டது என்ற பேச்சு இந்த வருட பொங்கல் ரேஸில் அதிகம் பேசப்பட்டது.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படம் நிச்சயம் ஹிட்டடித்துவிடும் என்ற நம்பிக்கையில் விஜய்யும், அவரது ரசிகர்களும் இருக்கின்றனர். இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். லியோ ரிலீஸுக்கு பிறகு 68ஆவது படத்துக்கான பூஜை போடப்படும் என தெரிகிறது.
விஜய் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்திருக்கிறார். அவர் சந்திக்காத விமர்சனம் அவரது நடனம் பற்றியது. அவர் நடனத்தை இந்தியாவில் மெச்சாதவர்களே கிடையாது. ஆனால் கடைசியாக அவர் நடித்த பீஸ்ட், வாரிசு படத்தில் அவரது நடனம் ட்ரோல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி தனக்கு தெரிந்ததையே தவறாக செய்யக்கூடியவர் விஜய் மட்டும்தான் என சிலர் ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு விஜய்யின் நடனம் ரசிக்கும்படி இல்லை. விஜய்யின் நடனத்தில் மிகப்பெரிய பலமே நடனம் ஆடுவதற்கான கடினத்தை தனது முகத்தில் காண்பிக்காததுதான். ஆனால் மேற்கூறிய இரண்டு படங்களிலும் அந்த எஃபர்ட் அப்பட்டமாகவே தெரிந்தது.
இந்தச் சூழலில் நடிகை அனுஷ்கா விஜய் குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நானும் விஜய்யும் வேட்டைக்காரன் படத்தில் நடித்தோம். அந்தப் படத்தில் இடம்பெற்ற என் உச்சி மண்டைல பாடல் ஷூட்டிங்கிற்காக அந்த செட்டுக்கு சென்றேன். அப்போது விஜய் அனைத்தையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார்.
ஷாட் ரெடி என்று இயக்குநர் சொன்னதும் நானும், அவரும் கேமரா முன்பு நின்றோம். டேக் போன பிறகு விஜய் ஆடிய நடனத்தை பார்த்து நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. ஒருமுறைதான் பார்த்தார். ஆனால் அவர் அப்படி ஆடிவிட்டார். அவர் எப்படி அப்படி ஆடினார் என்பது இப்போதுவரை தெரியவில்லை” என்றார்.
விஜய்யுடன் நடனம் ஆடியவர்கள், அவருக்கு நடனம் அமைத்தவர்கள் என பலரும் சொல்வர்து விஜய் ஒரே டேக்கில் நடனத்தில் அசால்ட் செய்துவிடுவார் என்பதுதான். உதாரணமாக அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெற்ற எல்லா புகழும் ஒருவனுக்கே பாடல் குறித்து சமீபத்தில் பகிர்ந்துகொண்ட நடன அமைப்பாளர் சதீஷ், ‘டேக் போய்க்கொண்டிருக்கும்போது விஜய் அண்ணாவின் நடனத்தை பார்த்து ஒரு கட்டத்தில் ஷாக் ஆகி நின்றுவிட்டேன். அவர் கால் தரையில் இருக்கிறதா இல்லையா என்பதே எனக்கு தெரியவில்லை’ என சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.





