- Advertisement -
Homeபொழுதுபோக்குமஞ்சுமல் பாய்ஸ் இயக்குனருடன் கைகோர்த்த ஆவேசம் இயக்குனர்... இருவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கப் போகிறார்களா......

மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனருடன் கைகோர்த்த ஆவேசம் இயக்குனர்… இருவரும் சேர்ந்து ஒரு படத்தை எடுக்கப் போகிறார்களா… இந்திய திரை உலகமே திரும்பிப் பார்த்த அறிவிப்பு…

- Advertisement -

கடந்த ஆண்டு மலையாள திரையுலகில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும், அதில் குறிப்பிட்ட சில திரைப்படங்கள் கேரளாவை தாண்டி தமிழ் சினிமாவிலும் வெற்றி பெற்றன. இதில் மிக முக்கியமாக நாம் சொல்ல வேண்டிய திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் இயக்கப்பட்டது.

 

- Advertisement -

கொச்சிக்கு அருகே உள்ள பகுதியை சேர்ந்த நண்பர்கள் கொடைக்கானலுக்கு செல்லும்போது அவர்களின் ஒருவர், குணா குகையில் உள்ள பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறார். பிறகு அவரை எப்படி காப்பாற்றினார்கள் என்பதை விளக்குவது தான் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தை தன்னால் முடிந்த அளவுக்கு எவ்வளவு பரபரப்பாக எடுக்க முடியுமோ அதனை முழுவதுமாக முடித்துக் காட்டி இருந்தார் இயக்குனர் சிதம்பரம். குறிப்பாக படத்தில் குணா திரைப்படத்தின் கண்மணி அன்போடு பாடல் இடம் பெற்ற காட்சி அனைவருக்கும் ட்ரீட்டாக அமைந்தது.

 

கேரளத் திரை உலகை தாண்டி தமிழ் சினிமாவிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கொடைக்கானலில் நடைபெறும் கதை என்பதாலும், படத்தில் தமிழ் மொழியிலும் காட்சிகள் இடம் பெற்று இருந்ததாலும் இது ஈசியாக இங்குள்ள மக்களுக்கு கனெக்ட் ஆனது. இதனைத் தொடர்ந்து பகத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்படமும் தமிழ் சினிமாவில் வெற்றியை பெற்றது.

 

இந்தத் திரைப்படம் தமிழுக்கு தொடர்பு இல்லை என்றாலும், பகத் பாசிலுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், இதனை பலரும் விருப்பப்பட்டு பார்த்தார்கள். இதில் அவரின் நடிப்பும் பலரும் பாராட்டி கொள்ளும் வகையில் இருந்தது. தன்னைத் தாக்கிய சீனியர்களை பழி வாங்குவதற்காக லோக்கல் ரவுடிகளை தேடும் கல்லூரி மாணவர்கள், அவர்களுக்கும் பாசிலுக்குமான சந்திப்பு, பிறகு நடக்கும் கலாட்டா காட்சிகள் என ஒவ்வொன்றும் அற்புதமாக இந்த திரைப்படத்தில் எழுதப்பட்டிருந்தது.

 

இதனை ஜித்து மாதவா என்பவர் இயக்கி இருந்தார். இப்படியான சூழலில் தான் தற்போது அவரது எழுத்தில் உருவாகும் திரைப்படத்தை இயக்குகிறார் மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம். பான் இந்தியா திரைப்படமாக இது உருவாக இருப்பதாக கூறுகிறார்கள். தற்போது விஜயின் 69 ஆவது திரைப்படத்தை எடுத்து வரும் கேவிஎன் நிறுவனம் தான், இதனை தயாரிக்கிறது. படத்தில் இடம்பெறும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்