- Advertisement -
Homeபொழுதுபோக்குகஜினி 2 படத்தில் சூர்யாவை மீண்டும் இயக்கும் ஏஆர் முருகதாஸ், தீபாவளி இலவச இணைப்பா இந்த...

கஜினி 2 படத்தில் சூர்யாவை மீண்டும் இயக்கும் ஏஆர் முருகதாஸ், தீபாவளி இலவச இணைப்பா இந்த வேலையையும் பார்த்துட்டாரா? – ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் காத்திருக்குது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் இளைய மகன், நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்கள் இவருக்கு உண்டு. இயக்குனர் அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கார்த்தி, இதுவரை 26 படங்களில் நடித்துள்ளார். இதில் 20-க்கும் மேற்பட்ட படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன.

குறிப்பாக பருத்திவீரன், பையா, தோழா, கடைக்குட்டி சிங்கம், சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், கொம்பன், கைதி, சர்தார், தீரன் அதிகாரம் 1, மெய்யழகன் உள்ளிட்டவை கார்த்திக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படங்களாக இருந்தன. அதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் கார்த்தி நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதேபோல் சர்தார் படமும் கார்த்தியின் சினிமா பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அடுத்து கைதி 2 மற்றும் கார்த்தி 29 ஆகிய படங்களில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் அதில் மாரி செல்வராஜின் அப்பாவின் கதையில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது.

இந்த சூழலில் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும் நடிகர் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 23 படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். அதேபோல் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தையும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

- Advertisement -

இந்த 2 படங்களின் படப்பிடிப்பிலும் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் பங்கேற்று வரும் நிலையில், தற்போது சல்மான்கான் நடிக்கும் இந்தி பட ஷூட்டிங்கில் ஏ ஆர் முருகதாஸ் பிஸியாக உள்ளார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 படத்தை படப்பிடிப்பை நடத்த வருகிறார். அடுத்து ஏஆர் முருகதாஸ் சூர்யா நடிப்பில் கஜினி 2 படத்தை இயக்கப் போவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதுகுறித்த பேச்சுவார்த்தை சூர்யாவுடன் தற்போது நடந்து வருகிறது.

இதற்கிடையே சூர்யா மற்றும் ஜோதிகாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில், புதிய படம் ஒன்றை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கஜினி 2 படத்திற்கு முன்பாகவே உருவாகி ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. தீபாவளிக்கு இலவச இணைப்பாக கஜினி 2 படத்துடன் சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து ஏ ஆர் முருகதாஸ் புதிய படம் இயக்குவது சூர்யா, கார்த்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்