சமீப காலமாக இசையமைப்பாளர் இளையராஜா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமாகி வருகிறது. அவர் வாய் திறந்து பேசினாலே ஏதேனும்பிரச்சனைகள் உண்டாகி விடுகிறது. நான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் எனக்கே சொந்தம் என்று காப்புரிமை கொண்டாடி வருகிறார். ஆனால் இது பலருக்கும் பிடிக்கவில்லை. இவ்வளவு சுயநலம் இளையராஜாவுக்கு கூடாது என்ற விமர்சனத்தையே கொண்டு வருகிறது.
ஏனெனில் சினிமாவில் ஒரு பாடல் என்பது, இசையமைப்பாளர் இசையமைக்கிறார். கவிஞர் அந்தப் பாட்டுக்கு வரிகளை எழுதுகிறார். அதை பாடகர் பாடுகிறார். ஆக கவிஞர், பாடகர், இசை அமைப்பாளர் என மூவரும் சேர்ந்து பங்களிப்பதால் தான் ஒரு பாடல் உருவாகிறது. அதே நேரத்தில் இந்த மூன்று பேருக்குமே தயாரிப்பாளர் அதற்கான சம்பளத்தை தந்து விடுகிறார். அதன்படி அந்த பாட்டுக்கு உரிமையாளர் என்பவர், படத்தின் தயாரிப்பாளர் தான். ஏனெனில் இவர்கள் மூவருமே அவரிடம் பாடலை விற்று விடுகின்றனர். இதுதான் எதார்த்தமான உண்மை.
ஆனால் இதைக்கூட புரிந்து கொள்ளாமல், இசையமைத்த ஒரே காரணத்திற்காக இளையராஜா இது என்னுடைய பாடல் என்றால், அதே போல் ஒரு பாடகரும் இதை நான்தான் பாடினேன், எனக்குத்தான் சொந்தம் என்று சொல்லலாம். அதேபோல ஒரு கவிஞரும் பாடலில் உள்ள கவிதை வரிகள் என்னுடையது என்று சொன்னால், என்ன செய்வது என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
சமீபத்தில், இசையும் பாடல் வரிகளும் கலந்ததுதான் பாட்டு; இதை அறியாதவன் அஞ்ஞானி என ஒரு விழாவில் பேசியிருந்தார் வைரமுத்து. அதற்கு கங்கை அமரன் பயங்கரமாக வைரமுத்துவை திட்டி ஒரு வீடியோ பதிவிட்டது பெரிய அளவில் வைரலானது. அதில் வைரமுத்து நாங்கள் இல்லை என்றால் வளர்ந்திருக்கவே முடியாது. வைரமுத்து, வாயை மூடிக்கொண்டு இரு என கடுமையாக பேசியிருந்தார்.
இந்நிலையில் குமரிமுத்து ஒரு நேர்காணலில் பேசிய வீடியோவை இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நாலடியார், பதினெண்கீழ் கணக்கு உள்ளிட்ட நூல்களில் உள்ள விஷயங்களை பற்றி குமரிமுத்து பேசியிருக்கிறார். ஆனால் அதில் அவர் குறிப்பிடும் விஷயங்கள் அனைத்தும், இளையராஜாவுக்கு பதில் சொல்வது போலவே இருக்கிறது. நான்தான் எல்லாம் தெரிந்தவன் என்று யாரும் நினைக்கக்கூடாது. பெரிய ஆள் என ஆடக்கூடாது. சூரியனையே ஒரு குடையை கொண்டு மறைத்துவிட முடிகிறது. படித்தவனுக்கு, படிக்காதவன் தான் அச்சாணியாக இருக்கிறான் போன்ற விஷயங்களை குமரிமுத்து அதில் பேசியிருக்கிறார்.
அதாவது இசைஞானிக்கு பதிலடி தருவது போல் இந்த வீடியோ அமைந்திருப்பதால், குமரிமுத்து பேசிய விஷயங்களின் மூலம் இளையராஜாவுக்கு ஏ ஆர் ரகுமான் சரியான பதிலடி தந்து விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் ஏஆர் ரகுமான் வளர்ச்சியால், இளையராஜா மிகப்பெரிய அளவில் கோபம், பொறாமை, ஆத்திரம் கொண்டார் என்று ஏற்கனவே பலரும் அறிந்ததுதான். ஆகவே, வைரமுத்துவை விமர்சித்து வரும் இளையராஜா, கங்கை அமரனுக்கு ஏஆர் ரகுமான் பதிலடி தந்த இந்த வீடியோ வைரலாகி வருகிறது.





