யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீணா தாண்டன், சஞ்சய் தத், ராமச்சந்திர ராஜூ, ஈஸ்வரி ராவ், மாளவிகா அவிநாஷ், பிரகாஷ் ராஜ், அச்யுத் குமார் உள்ளிட்டோர் நடிப்பில், இரண்டு பாகங்களாக வெளிவந்த பிளாக்பஸ்டர் மூவி கேஜிஎப். இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது.
இந்த படத்தின் மையக்கரு, தங்கச்சுரங்கம் ஒன்றில் கொத்தடிமைகளாக வேலை செய்பவர்களை கதாநாயகன் மீட்கிறான் என்பதுதான். இதில் யாஷ் நடிப்பு மிக பிரமாதமாக இருந்தது. குறிப்பாக, ஏழை தாய் தன் மகன், எப்போதும் வசதியாக வாழ வேண்டும் என ஆசைப்பட்டு இறந்து போகிறாள். அந்த தாயின் கனவை நிறைவேற்றும் மகனாக ராக்கி, தன் வீர தீரச் செயல்களால் வெற்றி பெறுகிறான். எதிரிகளை அழிப்பதுதான் கதை.
பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்ற இந்த படத்தை தொடர்ந்து பல படங்கள், இந்த கேங்ஸ்டர் சண்டைகளை மையப்படுத்தி வந்துக்கொண்டே இருக்கின்றன. ஆர்ஆர்ஆர் அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான். விக்ரம், ஜெயிலர், இனி வர உள்ள லியோ வரை எல்லாமே கேங்ஸ்டர் கருவை மையப்படுத்திய படங்களாகவே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கேஜிஎப் 1, கேஜிஎப் 2 படங்களை அடுத்து, கேஜிஎப் 3 படத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே எடுத்த இரண்டு படங்களும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் இலக்குகளை வெகு எளிதாக தாண்டிய நிலையில் இந்த 3வது பாகத்தை, மிக பிரமாண்டமாக எடுத்து, அதைவிட பலமடங்கு வசூலிக்கும் வகையில் ரசிகர்களை உற்சாகப்படுத்த கேஜிஎப் படக்குழு தீர்மானித்துள்ளது.
கேஜிஎப் 3 படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு 2024ல், அக்டோபர் மாதம் துவங்குகிறது. இந்தியாவில் 10 நாட்கள் வரை மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டு, பிறகு அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட 16 வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்திய தாதா வாக இருந்த ராக்கி என்கிற யாஷ், இன்டர்நேஷனல் தாதாவாக மாற உள்ளார்.
இதைத்தொடர்ந்து, இப்போதே நீண்ட தலைமுடி, தாடி, மீசை என படத்தின் கெட்டப்புக்கு ஏற்ப தன் தோற்றத்தை மாற்றிக்கொள்ள தயாராகி வருகிறார் யாஷ். மற்ற நடிகர், நடிகையர் அதே பாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கிறார்களா, அல்லது கதை வேறுமாதிரியாக உருவாக்கப்படுகிறதா என்பது பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் கதை என்பதால், படத்தை முதல் இரண்டு பாகங்களை விட இன்னும் மாஸ் ஆக காட்ட திட்டமிடப்பட்டுள்ளது.





