- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 5ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகிறது தி கோட் படம்; ரிலீஸ் நாளில் அதை...

வரும் 5ம் தேதி விஜய் நடிப்பில் வெளியாகிறது தி கோட் படம்; ரிலீஸ் நாளில் அதை தடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் – அட யாருமே இதை யோசிக்கலையே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்துள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆனால் இதுவரை வெளியான 3 சிங்கிள்களும் அவரது பெயர் சொல்லும்படி இல்லை.

அதனால் நாளை யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு, திரிஷா விஜய் குத்தாட்டம் போட்ட பாடலை 4வது சிங்கிளாக வெளியிட டைரக்டர் வெங்கட்பிரபு முடிவு செய்துள்ளார். இந்த பாடல், கில்லி படத்தில் இடம்பெற்ற அப்படி போடு போடு போடு அசத்திப் போடு கண்ணால என்ற அளவுக்கு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் அப்பா, மகனாக நடித்திருக்கிறார். அதிலும் மகன் விஜய் 23 வயது வாலிபராக டீ ஏஜிங் தொழில்நுட்பத்தில் காட்டப்பட்டுள்ளார். மேலும் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் ஏஐ தொழில் நுட்பத்தில் இந்த படத்தில் வருகின்றனர். சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என பல ஸ்பெஷல் அயிட்டங்களை வெங்கட்பிரபு வைத்திருக்கிறார்.

இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், கிச்சா சுதீப், கஞ்சா கருப்பு, வைபவ், ரம்யா கிருஷ்ணன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, கனிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. மேலும் படத்தின் நீளமும் 3 மணி நேரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே நேரத்தில் கேரளாவில் அதிகாலை 4 மணி, காலை 7 மணி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காலை 7 மணி என தி கோட் படம் ரிலீஸ் செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் காலை 9 மணிக்கு தான் தியேட்டர்களில் தி கோட் ரிலீஸ் ஆகிறது. இது தமிழ்நாட்டில் உள்ள தளபதி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

இந்நிலையில், தி கோட் படம் ரிலீஸ் ஆகும்போது சில நாட்களுக்கு தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தி கோட் படத்துக்கு தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், தியேட்டர்களில் அனுமதியின்றி 6 காட்சிகள் திரையிடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்