- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனிருத் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்த இசையமைப்பாளர் தமன் - தமிழில் உள்ள அந்த விஷயம்...

அனிருத் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்த இசையமைப்பாளர் தமன் – தமிழில் உள்ள அந்த விஷயம் தெலுங்கில் இல்லை என்றும் பகீர் குற்றச்சாட்டு!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் 5 இளைஞர்களில் ஒருவராக நடித்தவர் தமன். அந்த படத்தில் வசதியான வீட்டு பையனாக இருக்கும் அவர் எப்போதும் டிரம்ஸ் அடித்துக்கொண்டே இருப்பார். அந்த படத்தில் அவரை ஒரு இசை ஆர்வம் மிக்க வாலிபராக தான் ஷங்கர் காட்டியிருந்தார். நிஜ வாழ்விலும் அவர் இசையமைப்பாளராக தான் இருந்து வருகிறார்.

இசையமைப்பாளர் தமன் தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக அன்னபூரணி ஈரம் ஈஸ்வரன் எனிமி ஒஸ்தி கண்ணா லட்டு தின்ன ஆசையா காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 சகலகலா வல்லவன் (2015) சவாலே சமாளி (2015) தில்லுக்கு துட்டு மகாமுனி மீகாமன் வாரிசு ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களுக்கு தமன் இசை அமைத்திருக்கிறார்.

- Advertisement -

இதில் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை வெற்றியை பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் பாடல்கள் மட்டுமின்றி பிஜிஎம் எனப்படும் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது. அதிலும் காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 தில்லுக்கு துட்டு போன்ற திரில்லர் படங்களில் பிஜிஎம் இசையில் தமன் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுக்கு தமன் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இசையமைப்பாளர் தமன் கூறியதாவது, தெலுங்கில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்புகள் கிடைக்கிறது. சமீபகாலமாக நிறைய தெலுங்கு படங்களில் அவர் இசையமைக்கிறார். ஆனால் எனக்கு தமிழ் படங்களில் இசையமைக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை தெலுங்கு சினிமாவில் இல்லை. பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். அவர்கள் தெலுங்கு படங்கள் மீதான விருப்பத்தால் வேலை செய்யவில்லை. பணத்திற்காக மட்டுமே வேலை செய்கிறார்கள் என்று இசையமைப்பாளர் தமன், மறைமுகமாக அனிருத்தை சுட்டிக்காட்டி கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவில் திறமையாளர் மற்றும் புதிய இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதையும் தமன் சுட்டிக்காட்டி இருக்கிறார். இசையமைப்பாளர் தமன் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். குறிப்பாக அகண்டா 2 தி ராஜா சாப் போன்ற படங்கள் தெலுங்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு சினிமா ரசிகர்களையும் அவர் இசையால் கவர்ந்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்