- Advertisement -
Homeபொழுதுபோக்குபாடல் காப்புரிமை விவகாரத்தில் ரூ. 2 கோடி அபராதம் - இசைப்புயல் ஏஆர் ரகுமானுக்கு டில்லி...

பாடல் காப்புரிமை விவகாரத்தில் ரூ. 2 கோடி அபராதம் – இசைப்புயல் ஏஆர் ரகுமானுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படம் மூலம் அறிமுகமான அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இந்தி தெலுங்கு என சினிமா இசைத்துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறார். 7 முறை தேசிய விருதுகளை வென்ற அவர் ஆஸ்கர் விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்களாக இயக்கினார். இதில் விக்ரம் ஜெயம் ரவி கார்த்தி ஜெயராம் பிரபு பார்த்திபன் சரத்குமார் பிரகாஷ்ராஜ் ஐஸ்வர்யா ராய் திரிஷா சோபிதா துலிபாலா ஐஸ்வர்யா லட்சுமி கிஷோர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2ம் பாகம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த முடிவை படத்தில் மணிரத்னம் மாற்றியிருந்தார். அது அந்த நாவலை படித்த வாசகர்களுக்கு முற்றிலும் பிடிக்காமல் போனது. பொன்னியின் செல்வன் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற வீரா ராஜ வீர என்ற பாடல் காப்புரிமை விவகாரத்தில் ரூ. 2 கோடி அபராதம் செலுத்த டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஏஆர் ரகுமான் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொன்னியின் செல்வன் படம் 2ம் பாகத்தில் ஜெயம் ரவிக்கான ஒரு பாடலாக இந்த பாடல் இருந்தது.

- Advertisement -

வீரா ராஜ வீரா என்ற இந்த பாடல் சிவா ஸ்துதி பாடலை போல் உள்ளதாக பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் டில்லி ஐ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த வழக்கில் சிவா ஸ்துதி பாடல்கள் மூலமாக ஈர்க்கப்பட்டு அதை தழுவித்தான் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற வீரா ராஜ வீரா பாடலை உருவாக்கியதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் கோர்ட்டில் தகவல் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் காப்புரிமை சட்டத்தின்படி ஏ ஆர் ரகுமானுக்கு ரூ. 2 கோடியை டெல்லி ஐ கோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு ரூ. 2லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது. சமீபத்தில்தான் எந்திரன் படத்தின் கதையை காப்பியடித்ததாக இயக்குனர் ஷங்கர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து சொத்துகளை முடக்கியது. இப்போது ஏஆர் ரகுமானுக்கு காப்புரிமை சட்டத்தின் படி டில்லி ஐகோர்ட் ரூ. 2கோடி அபராதம் விதித்திருக்கிறது. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்