இசைப்புயல் ஏஆர் ரகுமான், கடந்த 1990களில் ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். மணிரத்னம் இயக்கிய அந்த படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக பாடல்களில், இசையில் இந்த படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. சின்ன சின்ன ஆசை, காதல் ரோஜாவே போன்ற பாடல்கள் அப்போதே செம ட்ரெண்டிங்கில் இருந்தன.
தொடர்ந்து தமிழ் சினிமாவில், இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் பல வெற்றி படங்களை கொடுத்தார். பல ஹிட் பாடல்களை கொடுத்தார். அதனால் அவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் என்று அழைக்கப்படுகிறார். மணிரத்னம், பாரதிராஜா, கே பாலச்சந்தர் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமின்றி, அனைத்து தரப்பு இயக்குனர்களுக்கும் மிகச் சிறந்த பாடல்களை தந்து கொண்டிருப்பவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்.
அவர், இசையில் ஆஸ்கார் விருது பெற்ற நாயகன் என்ற பெருமைக்குரியவர். ஜெய்ஹோ பாடலுக்காக ஆஸ்கார் விருது பெற்றார் ஏஆர் ரகுமான். விழா மேடையில் விருது பெறும் போது கூட எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தனது இமாலய வெற்றியை இறைவனுக்கு சமர்ப்பித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஏஆர் ரகுமான்.
இந்நிலையில், சமீபத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் சென்று மணிக்கணக்கில் அமர்ந்து, அந்த படத்தின் ஷூட்டிங்கை பார்த்து ரசித்து இருக்கிறார். வழக்கமாக அவர் ரெக்கார்டிங் ரூம் விட்டு, இப்படி பொது இடங்களுக்கு வெளியே செல்லவே விரும்பாதவர் என்ற நிலையில், இப்படி சூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரில் வந்து அவரை படப்பிடிப்பை நேரில் பார்த்து ரசிப்பது என்பது படக்குழுவினர் மத்தியில் மிகுந்த ஆச்சரியத்தை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏஆர் ரகுமானை இப்படி வரவழைத்தது நடிகர் தனுஷ்தான். நடிகர் தனுஷ் இப்போது தனது 50வது படம் ராயன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளரான ஏஆர் ரகுமான் சில காட்சிகளை ரிவ்யூ பார்த்திருக்கிறார். அதன்பிறகு படத்தின் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக நேரிலேயே வந்தமர்ந்து மணிக்கணக்கில் பார்த்துவிட்டு சென்றுள்ளார்.
ராயன் படம் குறித்து, படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ தனுஷிடம் பேசிய ஏஆர் ரகுமான், படம் அல்டிமேட் ஆக இருக்கிறது என்று பாராட்டியிக்கிறார். இந்த படத்துக்கான பின்னணி இசை முழுவதும் நானே அமைத்து தருகிறேன் என்றும் கூறி இருக்கிறார். பொதுவாக அவர் இசையமைக்கும் படங்களில் பின்னணி இசை அவர் போடுவதில்லை. இருந்தாலும் இந்த படத்துக்கு நானே போட்டுத் தருகிறேன் என்று மகிழ்ச்சியாக தனுஷிடம் உறுதி தந்திருக்கிறார். அந்த வகையில் இன்னொரு வெற்றிமாறனாக, இயக்குனர் தனுஷ் உருவாகி வருகிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பாராட்டை பெற்றுள்ளார்.





