- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி தெறிக்கவிடப்போகும் லியோ டீம்.. தயாரிப்பாளர் கொடுத்த மாஸ் அப்டேட்

இனி தெறிக்கவிடப்போகும் லியோ டீம்.. தயாரிப்பாளர் கொடுத்த மாஸ் அப்டேட்

- Advertisement -

விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த வருடத்தின் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று இந்தப் படம் கணிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்திருக்கும் மாஸ்டர் படம் நூறு கோடி க்ளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. விஜய்யும் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து லியோ படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வர ஆரம்பித்தன. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. மேலும் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடப்பதாக இருந்தது. அதற்கான பாஸ்களும் வழங்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டதாக நேற்று தீயாக தகவல் பரவியது. ஆனால் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

பாஸ்களுக்கான கோரிக்கைகள் நிரம்பி வழிவதாலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளாலும் இந்த விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது நிறுவனம். ஆனால் இதற்கு பின்னால் அரசியல் அழுத்தம்தான் இருக்கிறது என்று ஒரு சிலர் கூறிவருகின்றனர். இதனால் இன்று காலையிலிருந்து லியோ படம்தான் ஹாட் டாபிக்காக இருக்கிறது. ட்விட்டரில் We Stand With Leo என்ற ஹேஷ்டேக்க் ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் 68ஆவது படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுபோன்ற ஒரு முடிவை எடுப்பதற்கு தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸுக்கும், ஜெகதீர்ஷுக்கும் அதிக தைரியம் தேவைப்பட்டிருக்கும். நம் தளபதிக்கு அவரது ரசிகர்களின் பாதுகாப்புதான் முக்கியமாக இருக்கிறது.

அடுத்தடுத்து வரபோகும் அனைத்து அப்டேட்டுகளையும் கொண்டாடலாம், என்னுடைய வார்த்தையை கோடிட்டு வைத்துக்கொள்ளுங்கள் லியோ திரைப்படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கும். We Stand With Leo” என்று குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்