- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கு படம் என்றால் உடனே ஓகே தான், தமிழ் படத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை?...

தெலுங்கு படம் என்றால் உடனே ஓகே தான், தமிழ் படத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? – கடும் விமர்சனத்தில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படுவர் சிரஞ்சீவி. திரைப்பட நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். ரஜினிகாந்த் அமலா நடித்த மாப்பிள்ளை படத்தின் தயாரிப்பாளர் அவர்தான். அந்த படத்திலும் ஒரு சண்டை காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருப்பார்.

பிரஜா ராஜ்ஜியம் என்கிற அரசியல் கட்சி ஒன்றை துவங்கிய அவர் பிறகு அந்த கட்சியை கலைத்து விட்டார். சிரஞ்சீவியின் மகன்தான் நடிகர் ராம்சரண். கேம் சேஞ்சர் மாவீரன் ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். இப்போது 70 வயதுகளை கடந்தும் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்து வருகிறார். நடனத்தில் சிரஞ்சீவி ஒரு அற்புதமான கலைஞராக இப்போதும் இருந்து வருகிறார்.

- Advertisement -

இப்போது இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி – நடிகை நயன்தாரா நடித்த படம் மன ஷங்கர வரபிரசாத் காரு. இந்த படம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தளபதி படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா தான். அவர் தனது இசையில் உருவான பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்த கூடாது. அந்த பாடல்கள் அனைத்தும் எனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமம் கொண்டாடி வருகிறார். அப்படி பயன்படுத்த பாடல்கள் இடம்பெற்ற படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடுப்பது இளையராஜாவின் வழக்கமாக உள்ளது.

- Advertisement -

குறிப்பாக தமிழில் இளையராஜா பாடல்களை பயன்படுத்திய பல பட நிறுவனங்கள் மீது அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், நஷ்ட ஈடாக கோடிக்கணக்கில் பணம் கேட்டதும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு விதத்தில் இளையராஜா இசையை விரும்பும் அவரது ரசிகர்களுக்கு கூட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தெலுங்கு படத்தில் தளபதி படப்பாடலை பயன்படுத்த இளையராஜா அனுமதி தந்திருக்கிறார்.

இதுகுறித்து தெலுங்கு படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி கூறுகையில், இந்த படத்தில் தளபதி பட பாடலை பயன்படுத்த அனுமதி கேட்டதும் உடனே இளையராஜா ஓகே சொல்லிவிட்டார். எதையும் முறைப்படி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தமிழ் படங்கள் என்றால் நோ சொல்வார். தெலுங்கு படம் என்றால் உடனே ஓகே சொல்வாரா? ஏன் இப்படி ஓரவஞ்சனை செய்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்