- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுயை சோர்வுக்கு காரணம் அந்த நோய்தான், 34 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன் - நடிகர்...

என்னுயை சோர்வுக்கு காரணம் அந்த நோய்தான், 34 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன் – நடிகர் விஷ்ணு விஷால் பதிவால் அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம் நீர்ப்பறவை ராட்சசன் இன்று நேற்று நாளை முண்டாசுப்பட்டி கட்டாகுஸ்தி என பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். விரைவில் அவர் நடித்த கட்டாகுஸ்தி 2 படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம். முதலில் உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்தில் என்னுடைய பதிவு அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது.

- Advertisement -

அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள். அதற்கு காரணம் ஆட்டோஇம்யூனோ என்ற ஒரு நோயால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். கடந்த 34 ஆண்டுகளாக நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்காக டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன்.

அந்த மருந்துகளின் பக்க விளைவுதான் இந்த சோர்வு. ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல் நலத்திற்கு மிகவும் அவசியமானது. அதேசமயம் நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும் நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும் மேலும் கட்டாகுஸ்தி 2 படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேற செய்கின்றன.

- Advertisement -

அதனால் தான் உடல்நிலை சவால்கள் இருந்த போதிலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். உடல்நிலை விரைவில் குணமாகி விடும். நீங்கள் காட்டிய அக்கறை என்னை இன்னும் சிறப்பாக என் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும் உங்கள் ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

இப்போது கட்டாகுஸ்தி 2 படத்தின் பிரமோஷன் வேலைகளில் இறுதி கட்டப் பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நன்றியுடன் உற்சாகத்துடன் இருக்கிறேன். இந்த படத்தை நீங்கள் அனைவரும் கண்டுகளித்திட காத்திருக்கிறேன் என்று விஷ்ணு விஷால் அந்த பதிவில் கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்