- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சந்தானத்துடன் இணையும் முக்கிய ஹீரோ... விரைவில் உருவாகிறது காமெடி கலாட்டா...

நடிகர் சந்தானத்துடன் இணையும் முக்கிய ஹீரோ… விரைவில் உருவாகிறது காமெடி கலாட்டா…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணித்து புகழில் உச்சிக்கு சென்றவர் நடிகர் சந்தானம். தனது ஒன்லைன் காமெடி மற்றும் டைமிங் காமெடியால் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் சந்தானம். மன்மதன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து படிப்படியாக முன்னேறினார்.

குறிப்பாக சொல்லப்போனால் இயக்குனர் ராஜேஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் சந்தானத்தை மிகப்பெரிய உச்சத்திற்கு அழைத்துச் சென்றது. ராஜேஷ் – ஜீவா கூட்டணியில் முதலில் உருவான சிவா மனசுல சக்தி திரைப்படம் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் என்றே கூறலாம். படத்தின் ஆரம்பத்தின் முதல் இறுதி வரை சந்தானம் மற்றும் ஜீவா ஆகியோர் அடித்த லூட்டிகள் ரசிக்கும்படி இருந்தன.

அதிலும், சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் சந்தானம் ஒன்லைனில் கலக்கி இருந்தார். இதன் பிறகு பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து லூட்டி அடித்திருப்பார் சந்தானம். சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு ஒரு படிக்கு மேலாக, காமெடியில் அதகளப்படுத்தி இருப்பார் சந்தானம். ஆர்யா சந்தானம் கெமிஸ்ட்ரி சரியாக இருந்ததால், படத்திற்கு ரசிகர்கள் பச்சை கொடி காட்டினார்கள்.

தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்து சந்தானம் புகழ் அடைந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அத்தனை நடிகர்களுடனும் இணைந்து காமெடியில் கலக்கியதால், சந்தானத்தின் கால் சீட்டுக்காக தயாரிப்பாளர்கள் பின்னால் அலைந்தனர்.

இப்படியான காமெடியை சற்று ஓரம் தள்ளி ஹீரோவாகவும் அறிமுகமான சந்தானம். இதில் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை கொடுத்தன. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இப்படியான சூழலில் அவர் நடிப்பில் அடுத்த மாதம் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் முதல் திரைப்படம் ஆன மாநகரம் திரைப்படத்தில் டயலாக் எழுதி இருந்தார். சந்தானத்தின் டிக்கிலோனா திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். தற்போது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக, சந்தானம் மற்றும் ஆர்யாவை வைத்து முழு நீள காமெடி படத்தை எடுக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சக்சஸில் முடிவடைந்ததால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இப்பொழுதே எழுந்துள்ளது.

சற்று முன்