பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களுமே அந்த அளவு பெரிய வெற்றியை பெறவில்லை. இதில் ஒன்று நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம். துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும் வசூல் ரீதியாக எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் இந்த திரைப்படத்திற்கு எந்த ஒரு வரவேற்பும் இல்லை. இதனால் வந்த இடம் தெரியாமல் இந்த படம் மறைந்து போனது. இதனைத் தொடர்ந்து விக்ரமை வைத்து தங்கலான் படத்தை எடுத்தார் பா ரஞ்சித். இதற்காக கடினமான உழைப்பை போட்டார் விக்ரம்.
ஏறிய நெற்றி அடர்ந்த தாடி கையில் தடி என அவரது தோற்றமே பலரும் வியக்கும் வகையில் அமைந்தது. இதன் டீசரும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதால் நிச்சயம் தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனை எல்லாம் அந்த திரைப்படம் தவிடு பொடி ஆக்கிவிட்டது.
குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி சரியில்லை என்று பலரும் குறை கூறினார்கள். வசனமே புரியவில்லை என்பதும் தொய்வான திரைக்கதையும் படத்தை ஆடியன்ஸ்களுடன் ஒன்றவிடவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தன. இதன் காரணமாக தங்கலான் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பா ரஞ்சித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்து வந்தது. அவர் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.
ஏன் இதற்கான போஸ்டர் கூட வெளிவந்தது. ஏற்கனவே இதன் முதல் பாகம் பெரிய அளவில் பேசப்பட்டதால், பலரும் அந்த திரைப்படத்தை எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் இப்படியான சூழலில் அவர் திடீரென வேட்டுவம் திரைப்படத்தை எடுப்பதற்கான பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். கெத்து தினேஷ் தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகனாம்.
படத்தில் வில்லனாக ஆர்யா வருகிறாராம். பகத் பாஸிலும் இருப்பதாக கூறுகிறார்கள். முதலில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டூடியோவில் தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது திடீரென அதன் லொகேஷனை பா ரஞ்சித் மாற்றி இருக்கிறாராம். அதன்படி தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். ஏற்கனவே தங்கலான் திரைப்படத்தின் காட்சிகளை அங்கு எடுத்திருந்த விக்ரம், அந்த லொகேஷன் பிடித்துப் போனதால் மீண்டும் தஞ்சாவூரை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





