- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருநெல்வேலியில் ஜோராக நடக்க போகும் கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமணம்... இணையத்தில் வைரலாகும்...

திருநெல்வேலியில் ஜோராக நடக்க போகும் கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன் திருமணம்… இணையத்தில் வைரலாகும் கல்யாண பத்திரிகை…

- Advertisement -

சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அசோக் செல்வன். நலன் குமாரசாமி இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், விஜய் சேதுபதியின் குழுவில் நடித்திருந்த அசோக் செல்வன் பலராலும் கவனிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பீட்சா 2-வில் நடித்த அவருக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது தெகிடி திரைப்படம். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவான இந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தை பெற்று அசோக்செல்வனுக்கு வெற்றி படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தது.

- Advertisement -

அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. காதலை கதைக்களமாக கொண்டு மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த படத்தின் மூலம் சாக்லேட் பாயாக உருவெடுத்த அசோக் செல்வன், நல்ல கதையை தேர்வு செய்து நடிப்பதாக மக்களிடம் பாராட்டை பெற்றார்.

சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படமும் அசோக் செல்வனுக்கு நல்ல இமேஜை கொடுத்தது. மூத்த நடிகர் சரத்குமாருக்கு இணையாக தனது நடிப்பை வெளிப்படுத்திய அசோக் செல்வன், திரையரங்குகளில் ரசிகர்களிடம் கைதட்டல்களை பெற்றார். தற்போது ப்ளூ ஸ்டார் என்னும் திரைப்படத்தில் அவர் நடித்து முடித்திருக்கிறார்.

- Advertisement -

பா ரஞ்சித் தயாரிக்கும் இந்த திரைப்படம், அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் போது இவருக்கும், நடிகர் அருண்பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியனுக்கும் காதல் உருவானதாக கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் அவர்களின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியானது. இருவரின் காதலுக்கும் பெற்றோர் வீட்டார் சம்மதம் தெரிவித்திருப்பதால் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் 13ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவர்களின் கல்யாண பத்திரிகை தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமணம் நடைபெறுகிறது. இதில் அருண் பாண்டியனுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் திரையுலகினர் ஏராளமான கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்