- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த கேரக்டரில் நடிக்க மறுத்த அசோக் செல்வன், மற்ற நடிகர்களும் நோ சொன்னதால் அப்செட் ஆன...

அந்த கேரக்டரில் நடிக்க மறுத்த அசோக் செல்வன், மற்ற நடிகர்களும் நோ சொன்னதால் அப்செட் ஆன டைரக்டர் தனுஷ் – கடைசியில் இட்லி கடையில் இப்படி செஞ்சுட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்து வருகிறார். சமீபத்தில் அவரது 50வது படம் ராயன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தனுஷ் டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்திருந்தார். குபேரா படத்தில் நடித்துள்ள தனுஷ், அடுத்து இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில் 2 பாகங்களில் நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

ராயன் படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இந்த படம் 155 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த ஆண்டில் வெளிவந்த 165 தமிழ் படங்களில், 100 கோடி ரூபாய் வசூலித்த ஆறு படங்களில் தனுஷ் நடித்து, இயக்கிய ராயன் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ராயன் படத்தில் தனுஷூடன் சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சரவணன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றியைத் தந்தது.

ராயன் படத்தை துவக்கத்தில் வன்முறை படம் என்று எதிர்மறை விமர்சனம் எழுந்தது. ஆனால் ராயன் படம் ஒரு கட்டத்துக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஏற்கனவே ப பாண்டி வெற்றிப் படத்தை இயக்கிய தனுஷ், 2வது படமாக ராயன் படத்தை இயக்கியது.

- Advertisement -

தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கிய நடிகர் தனுஷ், இப்போது அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ஆரம்பத்தில் துவங்கி தேனி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஒரு கேரக்டரில் அசோக் செல்வன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அசோக் செல்வன் அந்த கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

ஏனெனில் அழுத்தமான நல்ல கேரக்டராக இல்லாததால் இட்லி கடை படத்தில் நடிக்க அசோக் செல்வன் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் நடிக்க வேண்டிய ரோலில் நடிக்க, மேலும் சில நடிகர்களிடம் தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஆனால் யாருமே அந்த கேரக்டரில் நடிக்க சம்மதிக்க வில்லை. அதனால் இட்லி கடை படத்தில் அந்த ரோலையே தூக்கிவிட்டு, கதையில் தனுஷ் அதிரடியாக மாற்றங்களை செய்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்