- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் கிட்ட போய் கேளுங்க... இது தவறான விஷயம்! யாரை பாத்தும் எங்க கட்சி பயப்படாது......

விஜய் கிட்ட போய் கேளுங்க… இது தவறான விஷயம்! யாரை பாத்தும் எங்க கட்சி பயப்படாது… பிரேமலதா காட்டமான பதில்

- Advertisement -

தமிழ்நாட்டில் திரைத்துறையில் சாதித்த பலரும் பின்னாளில் அரசியலுக்கு வருவது என்பது நாம் பார்த்து பழகிய ஒன்றாக உள்ளது. எம்.ஜி.ஆருக்குப் பின் அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்ட தலைவர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். சினிமாவில் பல உயரங்களை அவர் அடைந்தாலும், அரசியலில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி வரை மட்டுமே அவரால் போக முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த், தனது தேமுதிக கட்சியை தொடங்கிய சமயத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு பெரும் அரசியல் ஆளுமைகள் இருந்ததே. அவர்களுடன் சம காலத்தில் அரசியல் செய்த விஜயகாந்த், அரசியலுக்கு அப்பாற்பட்டும் மக்கள் சேவை புரிந்துவந்தார். அதன்பின் அவர் உடல்நலக்கோளாறு காரணமாக தற்போது ஓய்வில் இருந்துவருகிறார்.

அந்த வரிசையில் நடிகர் விஜய்க்கு ஆரம்ப காலத்திலிருந்தே அரசியல் மீதான ஆர்வம் மேலோங்கியே இருக்கிறது. அதன் காரணமாகவே அவர் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். மேலும் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் விழா மேடைகளில் ஏதேனும் அரசியல் குறியீட்டுடன் அவரது பேச்சுகள் இடம்பெறுவதுண்டு.

- Advertisement -

கடந்தாண்டு தனது மக்கள் இயக்கத்தை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்த விஜய், அதில் வெற்றியும் கண்டார். தொடர்ந்து இயக்க நிர்வாகிகளை சந்திப்பது என அவ்வபோது கூட்டம் நடத்திய விஜய், கடந்த சில நாட்களாகவே அரசியலில் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறினர். அதற்காகவே அவர் பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற 234 தொகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு பாரட்டு விழா நடத்தினார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தக் கேள்வியை நீங்கள் முதலில் விஜய்யிடம் கேளுங்கள். யாரு சொல்லணுமோ அவர்களே இன்னும் வாய் திறக்கவில்லை. ஆனால், மற்றவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வருவதாக சொன்னதும், அதற்கு நான் பதிலளிக்கிறேன். எந்த சவாலையும், யாரையும் பார்த்து கேப்டனின் கட்சி பயப்படாது என்றார்.

- Advertisement -

தொடர்ந்து வடிவேலு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், விஜயகாந்த் தன்னை ஏமாற்றியவர்கள், துரோகம் செய்தவர்கள் என யாரைப் பற்றியும் தவறாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. வடிவேலு அவ்வளவு பேசியும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிந்த தயாரிப்பாளர்களிடம் பரிந்துரை செய்தார். அது தான் விஜயகாந்தின் குணம். அவர் உண்மையான தலைவர். இந்த குணம் எல்லாருக்கும் வந்துவிடாது. விஜயகாந்தை மக்கள் தவறிவிட்டு விட்டனர். பலருக்கும் அவர் உதவி செய்திருக்கிறார். எல்லா விஷயத்துக்கும் முன் நின்றிருக்கிறார். அவரை மக்கள் தவறவிட்டனர் என்றார்.

- Advertisement -

சற்று முன்