வெறும் இரண்டே இரண்டு திரைப்படங்கள் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் உற்றுநோக்கும் இயக்குனராக மாறிவிட்டார் அஸ்வந்த் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் முதல் திரைப்படமாக வெளிவந்தது ஓ மை கடவுளே. அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது.
காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், பேண்டஸியை கலந்து எந்த அளவுக்கு சுவாரசியமாக கொடுக்குமோ அந்த அளவுக்கு கொடுத்து அசத்தியிருந்தார் அஸ்வந்த் மாரிமுத்து. இந்த படத்தில் கேமியோ ரோலில் வந்து போனார் விஜய் சேதுபதி. இதற்காக அவர் பணம் கூட வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருமணம் செய்து உடனடியாக விவாகரத்து முடிவெடுக்கும் கதாநாயகனை மையப்படுத்தி இதன் கதை நகரும். படத்தில் அனைத்துமே கச்சிதமாக இருந்ததால், ஓ மை கடவுளே திரைப்படம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது டிராகன் திரைப்படத்தை அவர் எடுத்திருக்கும் சூழலில், அது திரையரங்குகளில் வசூல் குவித்து வருகிறது.
கல்வியை பிரதானப்படுத்தி அதில் சில என்டர்டைன்மென்ட் ஆன காட்சிகளை சேர்த்து ஒரு சூப்பர் பேக்கேஜ் திரைப்படம் ஆக இதனை கொடுத்து இருக்கிறார் அஸ்வந்த் மாரிமுத்து. ஏஜிஎஸ் நிறுவனம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் அஸ்வந்த் மாரிமுத்து.
அதில், ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியது. அப்போது ஒரு பெரிய ஸ்டாருக்கு கதை எழுத கூறினார்கள். அதன்படி, விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகியோரை இணைத்து வைத்து ஒரு கதை எழுதினேன். அது எனது கனவு திட்டம் என்று கூட கூறலாம்.
இப்போது அவர் அரசியலுக்கு சென்று விட்டார் படம் நடிக்க மாட்டார் என்று கூறுகிறார்கள். இருந்தாலும் எனது ஆசையை விட முடியுமா என்ன. எனக்கு விஜய் சாரை மிகவும் பிடிக்கும். அவரை வைத்து ஒரு காதல் ஆக்சன் கலந்த படத்தை எடுக்க எனக்கு மிகவும் ஆசை. தனுசுடனும் பணிபுரிய திட்டமிட்டிருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.





