- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் நடிக்கும் சுதா கொங்கரா படம் தள்ளிப் போகிறதா? பிரபல டைரக்டருக்கு பதிலாக அந்த கேரக்டரில்...

சிவகார்த்திகேயன் நடிக்கும் சுதா கொங்கரா படம் தள்ளிப் போகிறதா? பிரபல டைரக்டருக்கு பதிலாக அந்த கேரக்டரில் நடிப்பது இவரா? – சூப்பரான தகவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கவனம் பெற்றவர் சுதா கொங்கரா. இவர் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர். அடுத்து நடிகர் சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை அவர் இயக்கினார். இந்தி மொழி திணிப்பை எதிர்ப்பு சம்பவங்களை மையமாக வைத்து இந்த படத்தின் கதை இருந்தது.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட நடிகர் சூர்யா, ஒரு கட்டத்துக்கு பிறகு படத்தில் நிறைய மாற்றங்களும் திருத்தங்களும் சொன்னதால், அவருக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் படமும் டிராப் ஆகிவிட்டது.

- Advertisement -

இப்போது அதே கதையில், புறநானூறு என்பதற்கு பதிலாக வேறு டைட்டிலில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இது சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 25வது படம் ஆகும். இந்த படம் நிச்சயமாக அமரன் படம் போலவே சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அமரன் படத்தை முடித்துவிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் எஸ்கே 23 படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் கடந்து நடந்து வந்த நிலையில், அமரன் படம் பிரமோஷனுக்காக இடையில் சில வாரங்கள் பிரேக் விடப்பட்டது.

- Advertisement -

அப்போது இயக்குனர் ஏஆர் முருகதாஸ், இந்தியில் இயக்கும் சல்மான்கான் நடித்து வரும் சிக்கந்தர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்போது அமரன் படம் வெளியாகி விட்டதால் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் தயாராகிவிட்டார். அதனால் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகிற நவம்பர் 9ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து 25 நாட்களுக்கு படப்பிடிப்பு நடக்கிறது.

அதனால் சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம், ஒரு மாதம் தாமதமாக தான் துவங்கும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முக்கிய கேரக்டரில் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க முடியாது என்று ஒதுக்கி கொண்டதால், இப்போது அந்த கேரக்டரில் நடிகர் அதர்வா நடிக்க உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பரதேசி, ஈட்டி, சண்டி வீரன், 100 போன்ற பல படங்களில் சிறந்த நடிகராக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர். இந்த படத்தில் அதர்வா கேரக்டர் பேசும்படியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்