- Advertisement -
Homeபொழுதுபோக்குசன் பிக்சர்ஸ் காட்டிய பச்சைக்கொடி; அடுத்து ரூ. 2000 கோடி தான் இலக்கு; டைரக்டர் அட்லீ...

சன் பிக்சர்ஸ் காட்டிய பச்சைக்கொடி; அடுத்து ரூ. 2000 கோடி தான் இலக்கு; டைரக்டர் அட்லீ போடும் புது பிளான் – மாஸ் ஹீரோ கை கொடுப்பாரா?

- Advertisement -

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனராக முத்திரை பதித்தார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, முதல் படத்திலேயே திறமையை நிரூபித்தார். இந்த படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ், சத்யன், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.

தொடர்ந்து விஜய் நடித்த தெறி, பிகில், மெர்சல் ஆகிய 3 படங்களை இயக்கினார். இந்த 3 படங்களுமே வேற லெவலில், விஜய்க்கு மாஸ் ஆன படங்களாக அமைந்தன. இந்த படங்களின் மூலம், இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவானார். குறிப்பாக மெர்சல் படத்தை வேற லெவலில் தந்திருந்தார்.

- Advertisement -

இதை தொடர்ந்து இந்தியில் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார் அட்லி. பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த பதான் படத்தை தொடர்ந்து, ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை, அட்லி இயக்கினார். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் ரிலீசான துவக்கத்தில் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், 23 படங்களின் காப்பி என்று கிண்டலடித்தனர். ஆனால் இந்த படம் 1150 கோடி ரூபாய் வசூல் சாதனையை புரிந்தது. சினிமாவில் பதான் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த ஷாருக்கான், அந்த படத்தை தொடர்ந்து ஜவான் படத்திலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இதனால் ஹாலிவுட் சினிமா வட்டாரமே அதிசயமாக பார்த்தது.

- Advertisement -

இந்த சூழலில் மும்பையில் 40 கோடி ரூபாயில் சொந்த அலுவலகம், மற்றும் சொந்த வீடு வாங்கியுள்ள அட்லீ அங்கேயே குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் என்றாலும், சென்னையிலும் அவருக்கு என தனியாக ஆபீஸ் உள்ளது. அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்கும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை அட்லி இயக்க உள்ளார். புஷ்பா 2 படத்தை அடுத்து, அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய மாஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லி, சன் பிக்சர்ஸ் நிர்வாகத்துடன் செய்த ஒப்பந்தப்படி, இந்த படத்தின் வசூல் 500 கோடி ரூபாய்க்குள் இருந்தால் மட்டுமே தனக்கு சம்பளம் என்றும், 500 கோடியை வசூலில் தாண்டி விட்டால் தனக்கு பிராப்பர்ட்டி ஷேர் தர வேண்டும் என்றும் ஏற்கனவே அவர் கூறிய நிலையில், அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒத்துக் கொண்டு பச்சைக்கொடி காட்டி விட்டது. 1150 கோடி ரூபாய் வரை ஜவான் படத்தில் வசூலை அள்ளிய இயக்குனர் அட்லி, பான் இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்த படத்தை, 2000 கோடி ரூபாய் வரை வசூலில் அள்ள அட்லீ திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்