விஜய் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் மிக பிரபலமான நடிகராக இருக்கிறார். குறிப்பாக கேரளாவில் விஜய்க்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஹிந்தியில் விஜய்யின் திரைப்படங்கள் பல டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. எனினும் சமீப காலமாக விஜய்யின் புகழ் பாலிவுட்டிலும் பரவி உள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள “ஜவான்” திரைப்படத்தில் விஜய் ஒரு கேமியோ ரோலில் வருகிறார் என்று பல பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதே போல் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் ஹிந்தியிலும் வெளிவருகிறது. ஆதலால் விஜய் பேன் இந்திய நடிகராக ஓரளவு மாறிவிட்டார் என்றே கூறலாம்.
தமிழில் வெற்றி இயக்குனராக திகழ்ந்த அட்லீ, பாலிவுட்டிற்கு சென்று ஷாருக்கானை வைத்து படம் எடுத்தது போல் விஜய்க்கும் பாலிவுட் கனவு இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியாவது பாலிவுட்டிலும் தனது பட்டறையை போட்டுவிட்டால் ஒரு முழுமையான பேன் இந்திய நடிகராக மாறி விடலாம் என்று விஜய்க்கு ஒரு நினைப்பு இருப்பதாகவும் இது எல்லா நடிகருக்கும் உரிய கனவுதான் எனவும் பலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் அட்லீ சில நாட்களுக்கு முன்பு மும்பையில் 38 கோடிகளுக்கு ஒரு வீடு வாங்கியுள்ளாராம். முழு முச்சாக பாலிவுட் இயக்குனர் ஆகிவிடலாம் என்ற கனவில் அட்லீ இருக்கிறாராம். ஏற்கனவே அட்லீ விஜய்யை வைத்து மூன்று வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இருவருக்குமே நல்ல நட்பு உள்ளது. விஜய் அட்லீயை ஒரு சொந்த தம்பி போலவே பார்த்து வருகிறார். இவ்வாறு அட்லீ விஜய்யை பாலிவுட்டிற்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் விஜய்யின் கனவை நிறைவேற்ற அட்லீயால் நிச்சயமாக முடியும் எனவும் மூத்த பத்திர்க்கையாளர் அந்தணன், சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





