- Advertisement -
Homeபொழுதுபோக்குகதையில தான் இதெல்லாம் கேள்வி பட்டிருக்கேன். ஆனா இப்போ நெஜத்துலயும் வாழ்ந்துட்டேன் - ஜவான் குறித்து...

கதையில தான் இதெல்லாம் கேள்வி பட்டிருக்கேன். ஆனா இப்போ நெஜத்துலயும் வாழ்ந்துட்டேன் – ஜவான் குறித்து அட்லீ நெகிழ்ச்சி

- Advertisement -

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்ட அட்லீ அதன் பின்னர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் இளைய தளபதி விஜய்யை வைத்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து தென்னிந்தியாவின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்தார். இப்படி அடுத்தடுத்து இவர் கொடுத்த வெற்றி படங்கள் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

Jawan

அதன் விளைவாக பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கானை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு அட்லீ உயர்ந்தார். அந்த வகையில் ஷாருக்கானை வைத்து அட்லீ கடந்து சில ஆண்டுகளாகவே “ஜவான்” என்கிற படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்து வந்தார். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இப்படத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சுனில் குரோவர், சானியா மல்கோத்ரா, தீபிகா படுகோனே, சஞ்சய் தத் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இயக்குனர் அட்லீ மற்றும் ஷாருக்கான் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த படம் நயன்தாராவிற்கும் பாலிவுட்டில் அறிமுகப்படம் என்பதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழிகளில் வெளியாகியவுள்ள இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ கடந்த 10-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

அதோடு நிச்சயம் படம் வெளியானால் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை எட்டும் என்று தற்போதே அனைவரும் பேச துவங்கி விட்டனர். அதற்கு ஏற்றவாறு நடிகர் ஷாருக்கானும் அட்லீக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதில் ஜவான் படம் குறித்தும் அவர் பாராட்டி பேசியிருந்தார். இந்நிலையில் அவரது அந்த பதிவிற்கு ரீட்வீட் செய்த அட்லீ “அரசர்களின் கதையை படித்ததில் இருந்து நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒருவருடன் பயணித்திருக்கிறேன்” என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் கனவு வாழ்க்கையை நிஜத்தில் வாழ்கிறேன் என நினைக்கிறேன். இந்த படம் என்னுடைய வரம்புகளையும் மீறி என்னை செயல்பட வைத்துள்ளது. விலை மதிப்பற்ற பாடங்களை நான் கற்றுக் கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த மூன்று வருடங்களில் நான் உன்னிப்பாக சில விஷயங்களை உங்களிடம் கண்டேன். குறிப்பாக சினிமா மீதான உங்களது ஆர்வமும், கடின உழைப்பும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. இந்த வாய்ப்பை கொடுத்த உங்களுக்கும், படத்தின் மொத்த குழுவிற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என அட்லீ நெகிழ்ச்சியான ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்