- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது பெட்ரூம் இல்லே மேக்கப் போடுற ரூம் - கேரவனுக்குள் விளக்கம் கூறிய பிரபல நடிகர்

இது பெட்ரூம் இல்லே மேக்கப் போடுற ரூம் – கேரவனுக்குள் விளக்கம் கூறிய பிரபல நடிகர்

- Advertisement -

நடிகர்கள் பலர், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் போது மற்றவர்களை மிக சாதாரணமாகவே பார்க்கின்றனர். பொது இடங்களில், தங்களை மிக எளிமையாக காட்டிக் கொள்ளும் சில நடிகர்களை பார்த்து, அவர்களது குணமே அதுதான் என தவறாக நினைப்பவர்களும் உண்டு. அவர்களது வீடு தேடி சென்றாலோ, அல்லது தனியாக சென்று சந்தித்தாலோ அவர்களது அணுகுமுறையே வேறு மாதிரியாக இருக்கும். இதுதான் யதார்த்த உண்மை.

ரசிகர்கள் என் தெய்வங்கள் என மேடைகளில் பேசும் சில நடிகர்களை பார்க்க, ரசிகர்கள் அவர்கள் வீடுகளின் முன் தவம் கிடப்பதும், அவர்களை பார்க்க கால் கடுக்க காத்திருப்பதும், விமான நிலையம் போன்ற இடங்களில் செல்பி எடுக்க பின்னால் ஓடுவதும் தினந்தோறும் நாம் டிவி சேனல்களில், சமூக வலைதளங்களில் பார்க்கக் கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவர்.

- Advertisement -

ஆனால், ஒரு சில நடிகர்கள் மட்டுமே, ரசிகர்களிடம் உண்மையாக நடந்து கொள்வர். எந்தவிதமான பந்தாவும், சினிமா நடிகர் என்ற மமதை காட்டாமல், ரசிகர்களை மதித்து, அவர்களிடம் அன்பாக பேசி, ஜாலியாக பழகுவர். அதுவும் துணை நடிகர்களில் ஒருவராக நடித்து, பின் சிறிது சிறிதாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பெரிய நடிகரான பின்பும், வந்த நிலை மறவாமல் இந்த வளர்ச்சிக்கு, வாழ்க்கைக்கு ரசிகர்கள்தானே காரணம் என உணர்ந்து, நன்றி மாறாமல் நடந்துக்கொள்கின்றனர்.

நடிகர் சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டி காமெடி காட்சிதான் இவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் தந்தது. தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக வெற்றி பெற்று, இப்போது வெற்றி மாறன் இயக்கிய விடுதலை படம் மூலம் ஹீரோ ஆனார். இன்னும் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

- Advertisement -

கிராமம் போன்ற ஒரு இடத்தில், அவரது கேரவன் வேன் நிற்கிறது. அதன் படிக்கட்டுகளில் சூரி வெள்ளை சட்டை, வேட்டி கெட்டப்பில் சூரி நிற்கிறார். 30, 40 பேருக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கூட்டம் கேரவன் வேனை, சூரியை வேடிக்கை பார்க்கிறது. அவர்களிடம் என்ன பார்க்கறீங்க, என ஜாலியாக பேசும் சூரியிடம், கேரவன் வேனை காட்டி அந்த குழந்தைகள், இது பெட்ரூமா என கேட்கின்றனர். இது பெட்ரூம் இல்லை, மேக்கப் போடுற ரூம். வெளியில, வெயில்ல உட்கார்ந்து மேக்கப் போட்டா வேர்த்திடும். அதுக்காக தான். ஆர்ட்டிஸ்ட் எல்லாம் நடிச்சுட்டு வந்து ரிலாக்ஸ் ஆகற ரூம். என்கிறார் சூரி.

கேரவனை சுற்றிப்பார்க்க வேண்டும் என, குழந்தைகள் கேட்க உடனடியாக அந்த கூட்டத்தை கேரவனுக்குள் ஏற அனுமதித்து, அவர்களுடன் கலகலப்பாக உரையாடுகிறார். ஏஸி குளிரடிக்கிறது என்று கூச்சலிடுகின்றனர் குழந்தைகள். பின், வேனை விட்டு இறங்கிய அவர்களிடம், நல்ல படிக்கணும், நல்லா படிங்கப்பா என, அட்வைஸ் செய்து அனுப்புகிறார் சூரி. இதுதான், சூரி என்ற நல்ல மனிதரின் அடையாளம். அதுதான் அவரை அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்