- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயின் கடைசி படத்தில் இணையும் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்... மெல்ல மெல்ல காய்களை நகர்த்தும் வினோத்......

விஜயின் கடைசி படத்தில் இணையும் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்… மெல்ல மெல்ல காய்களை நகர்த்தும் வினோத்… இயக்குனரின் பட்டியலில் இருக்கும் நட்சத்திரங்கள் யார் யார்…

- Advertisement -

அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நான்கு நாட்களில் மட்டும் 288 கோடி ரூபாய் அந்த திரைப்படம் வசூலித்ததாக, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்திருக்கும் சூழலில் இதுவரை 500 கோடி ரூபாய் வசூலித்திருக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது ஒரு பக்கம் இருக்க தனது அரசியல் பயணத்தில் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் விஜய். விக்கிரவாண்டியில் முதல் அரசியல் மாநாட்டை அவர் நடத்த இருக்கிறார். செப்டம்பர் மாத இறுதியிலேயே இதற்கான திட்டம் போடப்பட்டது.

 

இதற்காக நிபந்தனைகளுடன் காவல் துறையும் அனுமதி வழங்கியது. இருப்பினும் கடைசி நேரத்தில் தனது மாநாட்டை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் விஜய். இன்னும் சில தினங்களில் மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

இதனிடையே தனது கடைசி திரைப்படத்திலும் விஜய் கவனம் செலுத்த இருக்கிறார். சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று துணிவு ஆகிய திரைப்படங்களை எடுத்த வினோத் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். முழுக்க முழுக்க அரசியல் களத்தில் இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.

 

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் கோலோச்சி இருக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை எடுக்கிறது. அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இதன் அறிவிப்பு போஸ்டரிலேயே கையில் தீப்பந்தம் இருப்பது போன்ற காட்சி இடம் பிடித்திருந்தது. வினோத், இந்தக் கதையை தான் கமல்ஹாசன் உடன் இணைந்து எடுக்க திட்டமிட்டு இருந்தார்.

 

இது தொடர்பான அறிவிப்பும் வெளியானது. படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்ற டைட்டில் வைக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில், இந்தத் திட்டம் தள்ளி போக தற்போது அந்தக் கதையை தான் விஜய் தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த நிலையில் விஜயின் 69 ஆவது படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய் – பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான கில்லி உட்பட சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதால், இந்த காம்போ நன்றாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர்.

சற்று முன்