- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட்டில் தயாரிப்பாளராகி பலத்த அடி வாங்கிய இயக்குனர் அட்லி; ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவான...

பாலிவுட்டில் தயாரிப்பாளராகி பலத்த அடி வாங்கிய இயக்குனர் அட்லி; ரூ. 150 கோடி பட்ஜெட்டில் உருவான பேபி ஜான் படம் வசூலித்தது எவ்ளோ தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றவர் அட்லி. பிறகு ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆர்யா நயன்தாரா ஜெய் நஸ்ரியா சத்யராஜ் சந்தானம் சத்யன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் வெகுவாக கவர்ந்த காதல் படமாக இருந்தது.

ராஜா ராணி படத்தின் வெற்றியை தொடர்ந்த நடிகர் விஜய் நடித்த தெறி மெர்சல் பிகில் ஆகிய படங்களை அட்லி இயக்கினார். 3 படங்களுமே அடுத்தடுத்த வெற்றிப் படங்களாக இருந்து விஜய்க்கும் பெரிய மாஸ் தந்தது. அதே போல் அட்லிக்கும் இந்த படங்கள் பெரிய புகழை தேடித் தந்தன.

- Advertisement -

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படங்களை பார்த்த பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், அட்லிக்கு அழைப்பு விடுத்தார். தனது படத்தை இயக்க வாய்ப்பளித்தார். அட்லி இயக்கத்தில் ஜவான் படம் உருவானது. இதில் ஷாருக்கான் தீபிகா படுகோன் நயன்தாரா விஜய் சேதுபதி பிரியாமணி யோகிபாபு போன்ற தமிழ் நடிகர்களும் நடித்திருந்தனர்.

தமிழில் ரஜினி கமல் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதி, இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார். முதலில் 28 படங்களின் காப்பி என விமர்சிக்கப்பட்ட ஜவான் படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. பாலிவுட்டில் அட்லியின் புகழ் பரவியது.

- Advertisement -

முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளில், திருமண நிகழ்வுகளில் கலந்துக்கொள்ளும் அளவுக்கு ஜவான் படம் அவரது இமேஜை உயர்த்தியது. இந்த சூழலில் விஜய் தமிழில் நடித்த தெறி படத்தை, இந்தியில் அட்லி தயாரிக்க முன்வந்தார். இதில் வருண் தவான் விஜய் கேரக்டரிலும் சமந்தா கேரக்டரில் கீர்த்தி சுரேஷையும் நடிக்க வைத்தார்.

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான இந்த படம், இதுவரை ரூ. 50 கோடி வரை மட்டுமே வசூலித்துள்ளது. இன்னும் சில கோடிகள் வரை வரும் நாட்களில் வசூலிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் பேபி ஜான் படத்துக்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. ரூ. 150 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்த அட்லிக்கு, ரூ. 100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தேவையா ப்ரோ என்று தமிழ் சினிமா ரசிகர்கள் அட்லியை கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்