- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக வெற்றிக் கழகம் 2ம் ஆண்டு துவக்க விழாவில் மீண்டும் பரபரப்பு - செய்தியாளர்கள் மீது...

தமிழக வெற்றிக் கழகம் 2ம் ஆண்டு துவக்க விழாவில் மீண்டும் பரபரப்பு – செய்தியாளர்கள் மீது கடும் தாக்குதல் – காமராக்கள், மொபைல் போன்கள் உடைப்பு!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், இப்போது சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் பகுதியில் உள்ள பூஞ்சேரி என்ற இடத்தில் தனியார் ரிசார்ட் ஒன்றில் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நடந்து வருகிறது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உள்ளார்.

இன்று காலையில் ரிசார்ட் பகுதியில் விழா நடக்கும் அரங்கத்திற்குள் பாஸ் வைத்திருந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் அனுமதிக்கபடாமல் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. விழா நடக்கும் அரங்கத்துக்குள் 1800 பேர் முதல் 2000 பேர் வரை மட்டுமே அமர முடியும் என்ற நிலையில் 2000க்கும் அதிகமான பாஸ் வழங்கப்பட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் என்பது தெரிய வந்தது.

- Advertisement -

இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், விழா அரங்கத்துக்குள் செல்ல முடியாத படி பவுன்சர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனால் கட்சியினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு நுழைவாயில் பகுதிக்குள் நுழைய முற்பட்டதால் அவர்களை பவுன்சர்கள் தடுத்தி நிறுத்தி வெளியேற்றினர்.

இப்போது ரிசார்ட்டில் விழா அரங்கில் நிகழ்ச்சி துவங்கி 2ம் ஆண்டு துவக்க விழாவில் பலரும் பங்கேற்றுள்ள நிலையில், டிவிகே 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகளை செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் மீது அங்கிருந்த பவுன்சர்கள் திடீரென ஆவேச தாக்குதல் நடத்திய சம்பவம் பெரிய அதிர்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்த விழாவின் பாதுகாப்புக்காக அங்கு நூற்றுக்கணக்கான பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், செய்தி சேகரிக்க ரிசார்ட் பகுதிக்கு வந்த செய்தியாளர்களை உள்ளே விட மறுத்து, ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர். மேலும் அங்கிருந்த செய்தியாளர்களை ஆவேசமாக தாக்கியுள்ளனர். அவர்களது கேமராக்களை உடைத்து, மொபைல் போன்களையும் பிடுங்கி உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதில் காயமடைந்த ஒரு செய்தியாளர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு வயிற்றில், முதுகில், முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பவுன்சர்களுக்கு மொழி தெரியாததால் தாக்கியதாகவும், அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இருந்து செய்தியாளர்களை முறைப்படி அரங்குக்குள் அழைத்து செல்லாததுமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. எனினும் விஜய் நடத்தும் கட்சி விழாவில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்