- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் படத்தின் கதை திருட்டு விவகாரம் - ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட...

தனுஷ் படத்தின் கதை திருட்டு விவகாரம் – ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட பிரபல நடிகர் – பஞ்சாயத்து பண்ண தயாரான டைரக்டர் கே. பாக்யராஜ்

- Advertisement -

சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்த இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 50 கோடி என்ற நிலையில், இதுவரை படம் 105 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படம் முழுக்க வன்முறை, துப்பாக்கி சத்தம் என விமர்சிக்கப்பட்ட நிலையிலும், இந்த படத்துக்கு தமிழகத்தில் நல்ல வசூல் கிடைத்துள்ளது. கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் கேப்டன் மில்லர் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட வசூல் எதிர்பார்த்ததை விட பன்மடங்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தின் கதை, எழுத்தாளரும் பிரபல நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய பட்டத்து யானை என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வருகிற முக்கியமான 14 காட்சிகள், அப்படியே அந்த நாவலில் இடம்பெற்ற காட்சிகளாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புகாரை அந்த நாவலை படித்த, கேப்டன் மில்லர் படத்தை பார்த்த வாசகர்கள்தான் புகாரையே கிளப்பி உள்ளனர்.

வேல ராமமூர்த்தி, பல படங்களில் நடித்திருக்கிறார். கொம்பன், கிடாரி, அண்ணாத்த, அப்பா, புலிக்குத்தி முருகன் என பல படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களில் குணச்சித்திர நடிப்பிலும், சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து மறைவுக்கு பிறகு அவர் நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருபவர் வேல ராமமூர்த்தி.

- Advertisement -

இவர் மிலிட்டரியில் சில காலம் பணிபுரிந்தவர். எழுத்தாளராக பல நாவல்களை எழுதியிருக்கிறார். குற்றப் பரம்பரை, நாச்சிபுரம், பட்டத்து யானை உள்ளிட்ட பல கதைகளை எழுதியிருக்கிறார். இவருக்கு என ஒரு வாசகர் கூட்டமே இருக்கிறது. இவரது நடிப்பையும் ரசிகர்கள் விரும்பி ரசிக்கின்றனர்.

இதையடுத்து கேப்டன் மில்லர் படத்தில், தனது பட்டத்து யானை கதையை திருடி எடுத்தது குறித்து, தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் அதன் தலைவர் கே. பாக்யராஜிடம், வேல ராமமூர்த்தி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். மேலும் தொடர்ந்து இப்படி தமிழ் படங்களில் பிரபல எழுத்தாளர்களின் கதை திருட்டு தொடர்வதால் அதை நிரந்தரமாக தடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் பாக்யராஜ் தலைமையில், பஞ்சாயத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்