- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகர் ஹீரோவாக கமிட் ஆனதால் தான், மெகா பட்ஜெட் படத்திலிருந்து விலகினாரா நயன்தாரா?...

அந்த நடிகர் ஹீரோவாக கமிட் ஆனதால் தான், மெகா பட்ஜெட் படத்திலிருந்து விலகினாரா நயன்தாரா? – அவரது கேரக்டரில் நடிக்கப் போவது விஜய் பட நாயகியா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக உள்ள நயன்தாரா, இப்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா நடித்த படங்கள் பெரிய அளவில் சக்சஸ் ஆகவில்லை. அதுவும் குறிப்பாக அவரது 75 வது படம் அன்னபூரணி பிளாப் ஆனது. டிசம்பரில் பெய்த கனமழையும் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

அன்னபூரணி படத்தை நயன்தாரா மிகவும் எதிர்பார்த்த நிலையில், படம் ஏமாறறத்தை தந்தது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெய் நடித்திருந்தார். சத்யராஜூம் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு பிறகு எல்ஐசி, தக்லைப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நயன்தாரா நிராகரித்து விட்டதாக தெரிகிறது.

அடுத்ததாக அட்லி இயக்கத்தில், இந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். மெகா பட்ஜெட்டில் உருவான இந்த படம் 1150 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் அதன்பிறகு இந்தியில் தொடர்ந்து பட வாய்ப்புகள் எதிர்பார்த்த நயன்தாராவுக்கு, ஏமாற்றமே ஏற்பட்டது. அட்லிக்கு கிடைத்த வரவேற்பு, நயன்தாராவுக்கு பாலிவுட்டில் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்த நயன்தாராவுக்கு. பிரபாஸூடன் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தெலுங்கில் கண்ணப்பா என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. மிகப் பெரிய பட்ஜெட்டில் பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

பான் இந்தியா ஸ்டார் நடிகர் பிரபாஸ், கண்ணப்பா படத்தில் சிவன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கடவுள் பார்வதி கேரக்டரில் நயன்தாரா நடிக்கவும் முடிவானது. ஆனால் திடீரென சிவன் ரோலில் நடிக்க இருந்த பிரபாஸ், இப்போது அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். ஆனால் அதற்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து பிரபாஸ் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடிக்க கமிட்டாகி உள்ளார். அக்சய் குமார் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்று தெரிய வந்தவுடன், நயன்தாரா அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து நயன்தாரா கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்க கமிட் ஆனதாகவும் தெரிய வந்துள்ளது. நயன்தாரா ஏற்கனவே சீதையாகவும், மூக்குத்தி அம்மன் படத்தில் மூக்குத்தி அம்மனாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்