- Advertisement -
Homeபொழுதுபோக்கு21 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சேரனின் படம் ரி ரிலீஸ் - ரசிகர்களின் நினைவலைகளை புரட்டும்...

21 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சேரனின் படம் ரி ரிலீஸ் – ரசிகர்களின் நினைவலைகளை புரட்டும் டிரெய்லர் ஏஐ தொழில்நுட்பத்தில் வெளியீடு!

- Advertisement -

இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிசெய்து பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சேரன். பார்த்திபன் மீனா விஜயகுமார் ராஜா ரஞ்சித் வடிவேலு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. காதல் சாதியை மையப்படுத்திய கதையாக ரசிகர்களை கவர்ந்தது.

தொடர்ந்து பொற்காலம் வெற்றிக்கொடி தவமாய் தவமிருந்து இன்னொரு தேசியகீதம் ஆட்டோகிராப் பொக்கிஷம் மாயக்கண்ணாடி என பல படங்களை இயக்கிய சேரன், ஒரு கட்டத்தில் அவரது இயக்கத்தில் அவரே நடித்தார். தங்கர் பச்சான் போன்ற பிற இயக்குனர்களின் இயக்கத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

- Advertisement -

இயக்குனர் சேரன் போன்ற இயக்குனர்கள் உண்மையான படைப்பாளிகளாக ரசிகர்களுக்கு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த கூடியவர்களாக உள்ளனர். கமர்ஷியன் என்ற வணிக சந்தைக்குள் சிக்கிக்கொள்ளாமல் ரசிகர்களுக்கு தங்களது படைப்புகளால் வாழ்வியல் யதார்த்தங்களை உணர்த்த ஆசைப்படுபவர்களாக இருக்கின்றனர். அதனால் அவர்களது வெற்றி என்பது எப்போதும் நிலைத்திருப்பதில்லை.

சேரன் இயக்கத்தில் வெளியான படங்களில் 2004ம் ஆண்டில் வெளியாக மாபெரும் வெற்றியை பெற்ற படம் ஆட்டோகிராப். படம் பார்த்த ஒவ்வொரு ரசிகனையும் தனது பள்ளி கல்லூரி கால வாழ்க்கை நினைவலைகளை திரும்பி பார்க்க வைத்த ஒரு படம். சேரன் நாயகனாகவும் கனிகா கோபிகா சினேகா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களிலும் நடித்திருந்தனர். இந்த படம் 4 தேசிய விருது, 6 தமிழ்நாடு அரசு விருதுகளை பெற்ற படமாக உள்ளது.

- Advertisement -

21 ஆண்டுகளுக்கு பின் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் வண்ணத்திரையில் பார்க்கும் ஒரு வாய்ப்பாக ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதுவும் மிக விரைவில் ரி ரிலீஸ் குறித்த தேதி அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான ஆட்டோகிராப் டிரெய்லர் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெளிநாட்டில் காபி அருந்தியபடி காத்திருக்கும் சேரன் கனிகா கோபிகா சினேகா போன்றவர்களுடன் இருப்பது போலவும், அவர்கள் நடந்து வருவது போலவும் சேரன் சைக்கிளில் வயல்வெளிக்கு நடுவே செல்வது போலவும் உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்ப டிரெய்லர் வீடியோவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் வீடியோ ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது.

ஆட்டோகிராப் ஏஐ டிரெய்லர் வீடியோ காண இங்கு கிளிக் செய்யவும் https://x.com/Dir_Lokesh/status/1892190026123133023

- Advertisement -

சற்று முன்