இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவுக்கு அதுவரை பழக்கப்படாத டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
மிகவும் சிக்கலான இந்த திரைக்கதையை, எந்தவித குழப்பமும் இல்லாமல் நீட்டாக சமர்ப்பித்து ரசிகர்களை கவர்ந்தார் ரவிக்குமார். படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை ஏராளமான முடிச்சுகளை போட்டு, அதில் ஒவ்வொன்றையும் சுவாரசியமாக கட்டவிழ்த்து நம்மை ரசிக்கச் செய்திருப்பார் ரவிக்குமார்.
இந்த திரைப்படம் கொடுத்து வெற்றியால் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் வாய்ப்பை ரவிக்குமார் பெற்றார். 2018 ஆம் ஆண்டு இதன் சூட்டிங் தொடங்க, பொருளாதார பிரச்சனையால் முடங்கிப் போனது. ஏலியன் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு அயலான் திரைப்படமாக இது உருவானது.
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் விளங்கிய சிவகார்த்திகேயன், எப்படியாவது இதை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடினார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து, கடந்த பொங்கலன்று அயலான் திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறவில்லை.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இது வெளியாகியிருந்தாலும், இரண்டாம் பாதி பெரிதாக தவறாததால் படம் நன்றாக இல்லை என்று பலரும் கூறினர். இருப்பினும் குடும்பம் குடும்பமாக அதிகம் படத்திற்குச் சென்றதால் அதன் வசூல் ரேட் எகிறிது. இப்படியான சூழலில் ரவிக்குமார் அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்க கமிட் ஆகி வருகிறார். இதில் முதலாவதாக அவர் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார்.
சூர்யாவின் 44வது திரைப்படமாக உருவாகும் இதனை ட்ரீம் வாரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏப்ரல் மாதம் இதற்கான சூட்டிங் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சிவகார்த்திகேயன் உடனும் ரவிக்குமார் மீண்டும் இணைந்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அடுத்தடுத்து சூர்யா மற்றும் சிவகார்த்திகேயனை இயக்க இருப்பதால் ரவிக்குமார் இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிஸியாக இருப்பார் என்று திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.





