- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல்… ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த...

நடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல்… ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம்தான் சந்தானம் நாயகனாக அறிமுகமான முதல் படம். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் சந்தானம் நாயகனாக நடித்தார்.

இதில் அக்யூஸ்ட் ஒன் சபாபதி வடக்குப்பட்டி ராமசாமி தில்லுக்கு துட்டு டிடி ரிடர்ன்ஸ் இனிமே இப்படிதான் லட்டு தின்ன ஆசையா டகால்டி பாரிஸ் ஜெயராஜ் ஜிம்கானா என பல படங்களில் சந்தானம் நாயகனாக நடித்த நிலையில் இதில் பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தன.

- Advertisement -

நடிகர் சந்தானம் நடித்த டிடி நெஸ்ட் லெவல் படம் கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியானது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பீப்பிள் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு கிடைத்தது. மொத்தமாக ரூ. 12 கோடி வரை இந்த படம் வசூலித்தது.

கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற டிடி ரிடர்ன்ஸ் படத்தின் 2ம் பாகமாக டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகி இருந்தது. திகில் திரில்லர் கான்செப்ட்டில் உருவான இந்த படத்தில் கதாநாயகனாக சந்தானம் நடித்திருந்தார். மேலும் செல்வராகவன் கௌதமேனன் நிழல்கள் ரவி கஸ்தூரி மொட்டை ராஜேந்திரன் ரெடின் கிங்ஸ்லி யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிகர் சந்தானம் திரைப்பட விமர்சகர் கேரக்டரில் நடித்திருந்தார். இவர் ஒரு அமானுஷ்ய சக்தி மூலம் ஒரு திரைப்படத்திற்குள் குடும்பத்துடன் சென்று விடுகிறார். அதன் பிறகு அங்கிருந்து எப்படி அவர் குடும்பத்துடன் தப்பித்து வெளியே வருகிறார் என்பதே படத்தின் கதையாகும். வித்யாசமான கதைக்களமாக இருந்தாலும் வழக்கமான நக்கல் நையாண்டி வசனங்களால் மட்டுமே இந்த படம் ஜெயிக்க முடியவில்லை.

இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்களை கடந்த நிலையில் இப்போது ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுகிறது. வருகிற 13ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தியேட்டர்களில் ஓரளவு ரசிகர்களின் வரவேற்பை பெற்ற சந்தானம் படத்துக்கு ஓடிடி தளத்தில் பெரிய வரவேற்பு கிடைக்குமா, என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்