- Advertisement -
Homeபொழுதுபோக்குகடைசியில் அயலான் படமும் ஈயடிச்சான் காப்பிதானா? 2011ல் வந்த ஹாலிவுட் படத்தின் கதை தானாம் இது...

கடைசியில் அயலான் படமும் ஈயடிச்சான் காப்பிதானா? 2011ல் வந்த ஹாலிவுட் படத்தின் கதை தானாம் இது – ஜெராக்ஸ் காப்பிக்கு எதுக்குப்பா இத்தனை பில்டப்பு?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் படம் அயலான். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இந்த படம் எடுக்கப்பட்டு, இப்போதுதான் திரைக்கு வருகிறது. பலவிதமான தடைகளை கடந்து, பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், படம் முழுக்க ஏலியன் பொம்மையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. விஎப்எக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே இந்த படத்துக்கு பல கோடிகள் செலவு செய்யபப்ட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதனால் ஒரு கட்டத்தில் இந்த படத்துக்கு விஎப்எக்ஸ் பணிசெய்த நிறுவனத்தின் பில்லை, செட்டில் செய்ய முடியாமல் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவே ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்போது படம் ரிலீஸ்சின் போது ஓவர்சீஸ் உரிமத்தை அந்த விஎப்எக்ஸ் நிறுவனத்துக்கு தந்துள்ளனர் என்பது இதில் கூடுதல் தகவலாக உள்ளது.

இதற்கிடையே இந்த அயலான் படம் ஒன்றும் புத்தம் புதிய கதை அல்ல. கடந்த 2011ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் படமான Baul என்ற ஏலியன் படத்தின் தழுவல்தான் என்பது தெரிய வந்துள்ளது. அந்த படத்தின் டீசரும், இந்த படத்தின் டீசரும் ஒரே மாதிரி இருந்ததை வைத்து, இந்த ரகசியத்தை ரசிகர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

- Advertisement -

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், அந்த ஹாலிவுட் படத்தில் இருப்பதை போன்றே அயலான் படத்தில் இருக்கும் ஏலியனும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. இப்படி தமிழ் சினிமாவில் பில்டப் செய்து எடுக்கப்படும் பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரும்பாலும், ஈயடிச்சான் காப்பி படங்களாக தான் இருக்கிறது.

ஆனால் அதே வேளையில் இந்த ஈயடிச்சான் காப்பி படங்களுக்கு பல நூறு கோடிகளில் வசூலும் குவிந்து விடுகிறது. உதாரணமாக 23 படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்ட படம் என்று விமர்சிக்கப்பட்ட அட்லி இயக்கிய ஜவான், 1150 கோடி ரூபாய் வசூலித்தது. தங்கப்பதக்கத்தை காப்பியடித்த ஜெயிலரும், ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படத்தை காப்பியடித்த லியோவும் தலா 500 கோடி ரூபாய்களை கடந்தது. இனி வரப்போகும் கோட் படமும் ஈயடிச்சான் காப்பிதான். எப்படியோ ஜெராக்ஸ் கடை நடத்தியே பல நூறு கோடிகளை சம்பாதித்து விடுகின்றனர் தமிழ் சினிமா ஹீரோக்களும், டைரக்டர்களும், வாழ்க தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

சற்று முன்