லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். சூப்பர் ஸ்டார் ரேஸில் கொண்டு வந்து அவரது ரசிகர்கள் அவரை நிறுத்தியிருப்பதால் இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு கண்டிப்பாக அவசியப்படுகிறது. ஏனெனில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பேக்கை கொடுத்து தான் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ஏற்கனவே விஜய்யும் லோகேஷ் கனகராஜும் இணைந்து மாஸ்டர் என்ற பிரமாண்ட வெற்றி படத்தை கொடுத்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது. குறிப்பாக விக்ரம் படத்தில் லோகேஷ் எல்சியூ என்ற கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியிருந்தார். எனவே இந்தப் படத்தையும் அந்த எல்சியூவுக்குள் கொண்டு வந்து திரைக்கதையில் அதிரவிடப்போகிறார் என்கின்றனர் திரைத்துறையினர்.
படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் இரண்டு மாதங்கள் நடைபெற்றது. அதனையடுத்து சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்தது. பேட்ச் ஒர்க்கையும் லோகேஷ் கனகராஜ் முடித்திருக்கிறார். மேலும் படத்தின் முதல் பாதியை தான் பார்த்துவிட்டதாகவும் அவ்வளவு அருமையாக படம் வந்திருப்பதாகவும் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதம் 19ஆம் தேதி படம் வெளியாகிறது. இன்னும் ஒரு மாதம் மட்டுமே ரிலீஸுக்கு இருக்கிறது. அதன் காரணமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகள் இனி சூடுபிடிக்க தொடங்கும். இந்த மாதம் 30ஆம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறலாம்; அதற்கு முன்னதாகவே படத்தின் ட்ரெய்லர் வெளியாகலாம்; இந்த வாரத்தில் செகண்ட் சிங்கிள் வெளியாகலாம் என ஏகப்பட்ட தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
Thalapathy @actorvijay was spotted at Airport ✈️ #Leo #LeoAudioLaunch pic.twitter.com/ZkDjdNalXw
— Thalapathy Vijay Fans (@VijayFansPage) September 12, 2023
இந்தச் சூழலில் தனது 68ஆவது பட வேலை தொடர்பாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் விஜய். சில வாரங்கள் அங்கு தங்கியிருந்த அவர் தற்போது சென்னை திரும்பியிருக்கிறார். ஊதா நிற சட்டையில் ரொம்பவே கேஷுவலாக சென்னை விமான நிலையத்துக்கு இன்று வந்தார் அவர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன. மேலும் விஜய் வந்துவிட்டதால் விரைவில் ஆடியோ ரிலீஸ் நடக்கும் என்றும்; படத்துக்கான டப்பிங் வேலையும் இன்னும் ஒன்றிரண்டு நாளில் தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





