- Advertisement -
Homeபொழுதுபோக்குபடத்துக்கு விளம்பரம் தேட தயாரிப்பாளரே பார்த்த வேலையாம் - ஹீரோ பப்ளிசிட்டியே படத்துக்கு போதுமே -...

படத்துக்கு விளம்பரம் தேட தயாரிப்பாளரே பார்த்த வேலையாம் – ஹீரோ பப்ளிசிட்டியே படத்துக்கு போதுமே – இசையமைப்பாளர் ஏற்கனவே நிறைய சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படமும், நடிகர் விஜய் நடித்த லியோ படமும் சில மாத இடைவெளிகளில் கடந்தாண்டு வெளியானது. அப்போது காலை 9 மணிக்குதான் சிறப்பு காட்சி அனுமதிக்கப்படும். அதற்கு முன் அதிகாலை 4 மணி, காலை 6 மணி அல்லது காலை 7 மணி காட்சிகள் அனுமதி இல்லை என தெளிவாக தமிழக அரசு கூறிவிட்டது.

அதுமட்டுமின்றி காலை 9 மணிக்கு காட்சிகளை துவங்கி, இரவு 1.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதற்கு முன்னதாக, அதற்கு பின்போ காட்சிகளை திரையிட்டால் கடும் நடவடிக்கை பாயும் என தியேட்டர் நிர்வாகங்களுக்கும் எச்சரிக்கப்பட்டது. அதனால் விதிமீறலில் யாரும் ஈடுபடவில்லை.

- Advertisement -

ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை பொருத்தவரை யாரும், அதிகாலை காட்சி பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் லியோ படத்தின் அதிகாலை காட்சிக்காக, சென்னை உயர்நீதிமன்றம் வரை தயாரிப்பாளர் தரப்பு முட்டி மோதி பார்த்தும், அரசு உத்தரவின்படி காட்சிகளை நடத்துங்கள் என்று கோர்ட்டும் அதிரடி உத்தரவிட்டது.

அதனால் இனி தமிழ் சினிமாவில் வெளியாகும் யாருடைய படமாக இருந்தாலும் இதே விதிமுறைப்படிதான் படங்களின் காட்சிகள் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான் என்பதால் ரஜினி, விஜய்க்கு மறுக்கப்பட்ட அனுமதி மற்ற நடிகர்களுக்கும் தொடரும் என்று கருதப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அயலான் படத்துக்கு அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி விட்டதாக ஒரு தகவல் பரவியது. அதெப்படி ரஜினி, விஜய்க்கு ஒரு சட்டம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு சட்டமா என்ற கேள்வி பலமாக எழுந்தது. பலரும் இதில் உதயநிதி ஸ்டாலின்தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிப்படுத்தி கமெண்ட் அடித்தனர்.

ஆனால் கடைசியில், படத்தின் தயாரிப்பாளர் காலை 9 மணி காட்சியை தான் ஏர்லி மார்னிங் என தவறாக குறிப்பிட்டு பதிவு போட்டுவிட்டார். தெரியாமல் நேர்ந்த தவறு என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை அயலான் படம் குறித்த பரபரப்பை ஏற்படுத்த, பப்ளிசிட்டிக்காக தயாரிப்பாளர் செய்த பிரமோவாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுதான் படத்தின் ஹீரோ குறித்து, ஏற்கனவே இசையமைப்பாளர் இமான் நிறைய சொல்லி ஏகப்பட்ட பப்ளிசிட்டி தேடி தந்துவிட்டாரே, தயாரிப்பாளர் எதுக்கு அயலான் படத்துக்கு இப்படி ஒரு சிம்பிள் பப்ளிசிட்டி தேடி இருக்கிறார் என பலரும் கலாய்த்து தள்ளுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்