- Advertisement -
Homeபொழுதுபோக்கு15 வயது பெண்ணுக்கு தாயாக மாறும் நடிகை வரலட்சுமி சரத்குமார் - அவரது திருமணம் குறித்து...

15 வயது பெண்ணுக்கு தாயாக மாறும் நடிகை வரலட்சுமி சரத்குமார் – அவரது திருமணம் குறித்து வெளியான உண்மை தகவல்கள்!

- Advertisement -

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருந்து வருகிறார். கடந்த 1980களின் பிற்பகுதியில் சினிமாவுக்குள் வந்த சரத்குமாருக்கு புலன்விசாரணை படம் மூலம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கேப்டன் விஜயகாந்த். அந்த படத்தில் வில்லனாக நடித்த சரத்குமார், ஒரு கட்டத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சேரன் பாண்டியன், சூரியவம்சம், நாட்டாமை, நட்புக்காக, சமுத்திரம் போன்ற பல வெற்றிப்படங்களை தந்த நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே, மும்பையில் சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு 2 மகள்கள். அதில் ஒரு மகள்தான் வரலட்சுமி சரத்குமார்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், தொடர்ந்து சண்டக்கோழி, மாரி 2, தாரை தப்பட்டை, சர்க்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இப்போது தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

துவக்கத்தில் நடிகர் சிலம்பரசனுடன், வரலட்சுமி சரத்குமார் இணைத்து பேசப்பட்டார். இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதால், திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் நடிகர் விஷாலுடன் வரலட்சுமிக்கு காதல் என்றும், இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என்றும் பேச்சு அடிப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் நேறறு முன்தினம் திருமண நிச்சயதார்த்தம், மும்பையில் நடந்தது. சரத்குமார், ராதிகா, சாயாதேவி உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதைத்தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துக்கொள்ள போகும் நிக்கோலய் சச்தேவ் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர் மும்பையில் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 15 வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பே கவிதா என்பவருடன் அவருக்கு திருமணமான நிலையில், அவரை விவாகரத்து செய்துவிட்டார். இந்நிலையில் வரலட்சுமிக்கும், நிக்கோலய் சச்தேவ்க்கும் காதல் ஏற்பட்டதால், இந்த திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்