- Advertisement -
Homeபொழுதுபோக்குமூன்று நடிகைகளுடன் நெருக்கமான வாழ்க்கை, 2வது திருமணம் செய்துக்கொள்ள போகும் நடிகர் சித்தார்த்தின் பின்னணியில் இத்தனை...

மூன்று நடிகைகளுடன் நெருக்கமான வாழ்க்கை, 2வது திருமணம் செய்துக்கொள்ள போகும் நடிகர் சித்தார்த்தின் பின்னணியில் இத்தனை மர்மங்களா?

- Advertisement -

நடிகர் சித்தார்த், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு இளம் நடிகராக வலம் வந்துக்கொண்டு இருப்பவர். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான சித்தார்த், முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இதில் சித்தார்த் ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார்.

தொடர்ந்து தமிழில் ஆய்த எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, ஜிகர்தண்டா, சிவப்பு மஞ்சள் பச்சை, சித்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்த சித்தாார்த், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சித்தார்த் தயாரிப்பில் வெளியான சித்தா படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. இவருடன் சித்தார்த் ஒரு படத்தில் நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் நெருக்கமான காதல் ஏற்பட்ட நிலையில் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளது. கடந்த வாரத்தில் திருப்பதியில் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அதிதி ராவ் ஏற்கனவே, திருமணமாகி விவாகரத்து ஆனவர். அந்த சூழலில்தான் சித்தார்த்தை 2வது திருமணம் செய்கிறார். அதே போல் நடிகர் சித்தார்த் ஏற்கனவே மேக்னா என்ற பெண்ணை காதலித்து 2003ம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். அடுத்து 5 ஆண்டுகள் கழிந்த நிலையில், 2007ம் ஆண்டில் மேக்னாவை விவாகரத்து செய்துவிட்டார். அவருக்கும் இது 2வது திருமணம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் சித்தார்த் பிரபலமான 3 நடிகைகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி படங்களில் நடித்த போது பாலிவுட் நடிகை சோஹா அலிகான் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. சித்தார்த் அவருடன் சில ஆண்டுகள் நெருக்கமாக வாழ்ந்துள்ளார். பின்னர் அவரை பிரிந்து விட்டார்.

அதன்பிறகு கமல் மகள் ஸ்ருதிஹாசனும், சித்தார்த்தும் 2 ஆண்டுகள் சின்சியராக காதலித்துள்ளனர். லிவிங் டூ கெதரில் நீண்ட நாட்கள் ஸ்ருதியுடன் வாழ்ந்த சித்தார்த், ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறி விட்டார். அதன்பிறகு சமந்தாவுடன், நெருக்கமான நட்பில் இருந்திருக்கிறார் சித்தார்த். சமந்தா, சித்தார்த்தை திருமணம் செய்துக்கொள்ள போவது உறுதி என்று கூறப்படும் அளவுக்கு இறுக்கமான நட்பு இருந்த நிலையில், சமந்தாவுக்கும் சித்தார்த் டாடா காட்டி விட்டு, இப்போது அதிதி ராவ் கணவராக போகிறார்.

- Advertisement -

சற்று முன்