சமீபத்தில் சென்னையில், தமிழ் சினிமா இசைக்கலைஞர்கள் சங்கத் தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில், இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சபேசன், தலைவராக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் தலைவர் இசையமைப்பாளர் தீனா தோல்வியடைந்தார்.
இசையமைப்பாளர் தீனா குறித்து, சில தினங்களுக்கு முன், டைரக்டர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதில், பவதாரணியின் கையெழுத்தை போலியாக போட்டது உட்பட பல தில்லுமுல்லுகள், சங்கத்தில் நடந்துள்ளது. இதில் ரூ. 80 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது.
இசைக்கலைஞர்கள் சங்கத் தேர்தலில் ஜெயித்து, புதிய சங்க தலைவர் வந்தால் இதுபோன்ற ஊழல், கையாடல் விஷயங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால்தான், தீனா மீண்டும் தலைவராக திட்டமிடுகிறார். இது தமிழ் சினிமா இசைக்கலைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளர் தீனா குறித்த பல விஷயங்களை, நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, சிலருக்கு எப்போதும் பதவி ஆசை போகவே போகாது. அப்படி ஒரு ஆள்தான் தீனா. அதனால்தான் மீண்டும் சங்க தேர்தலில் போட்டியிட்டார்.
சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் தீனா ரொம்பவும் மோசமான ஒருவர். தன்னிடம் வீணை வாசித்த வந்த பெண்ணை, ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டார். மகனும், மகளும் உள்ள நிலையில் தீனா, குடும்பத்தை சரிவர கவனிக்காததால் அவர், தீனாவை விட்டு விலகிச் சென்று விட்டார்.
அதற்கு பிறகு, தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த ஒரு இஸ்லாமிய பெண்ணையும், இன்னொரு பெண்ணையும் மடக்கி, தன்னுடன் வைத்திருக்கிறார். பகலில் ஒரு பெண்ணுடன், இரவில் ஒரு பெண்ணுடன் என்று வாழ்ந்து வருகிறார். அந்த பெண்களும் வேறு வழியில்லாததால், அவருடன் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் விஷயத்திலும் மிக மோசமான மனிதராக இருப்பவர்தான் தீனா என்று பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.





