- Advertisement -
Homeபொழுதுபோக்குகொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி, மேடையில் கண்கலங்கி அழுத நடிகர் சத்யராஜ், எனக்கும் வாயில் நல்லா வரும்...

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி, மேடையில் கண்கலங்கி அழுத நடிகர் சத்யராஜ், எனக்கும் வாயில் நல்லா வரும் – தமிழக முதல்வர் விஜய்க்கு பதிலடி!

- Advertisement -

தமிழக முதல்வர் விஜய் கடந்த 1ம் தேதி திருச்சியில் தவெக சார்பில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது நான் சினிமா கவர்ச்சியில்தான் தேர்தலில் வெற்றி பெற்றேனா? வாயில் நல்லா வருது என்று ஆவேசமாக பேசியிருந்தார். இது ஊடகங்களில் பெரிய அளவில் வைரலானது.

தமிழகத்தின் முதல்வர் என்கிற உயர்ந்த பொறுப்பில் அந்தஸ்தில் இருப்பவர் விஜய். முதல்வராக உள்ள அவர் இப்படி பொது மேடையில் மக்கள் மத்தியில் அருவருக்கத்தக்க முறையில் பேசியது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரிய அளவில் கவனம் பெறறு பேசுபொருளானது.

- Advertisement -

இதுவரை தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த அண்ணாதுரை எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் உட்பட யாருமே இப்படி பொதுவெளியில் தவறாகவோ கொச்சையாகவோ பேசியது இல்லை. விஜய் இப்படி கண்ணியக்குறைவாக பேசியதை அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திமுக முன்னாள் தலைவர் முன்னாள் முதல்வர் மு கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது, ஒரு முதல்வர் மேடையில் பேசுகிற பேச்சா இது? வாயில் நல்லா வருது. எனக்கும் கூட தான் நல்லா வரும். நல்லா வரும். நல்லா நல்லா வரும். எவ்வளவு வேணும்னாலும் நல்லா வரும்.

- Advertisement -

என்னை இன்ஸ்டாகிராமில் இருக்கிற சிலர் திட்டுவதை பற்றி நான் கவலையே படமாட்டேன். தலையில் முடி இல்லை. உடம்பில் இருக்கிற முடியை பிச்சி வீசிட்டு போயிடுவேன். தேவைன்னா சொல்லுங்க எனக்கு நிறைய கெட்ட வார்த்தை வரும். நான் மரியாதையாக எல்லாவற்றையும் அமுக்கி வைத்திருக்கிறேன். இந்த தமிழ்நாட்டை பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சிதான்.

பெண்களுக்கு சொத்தில் சரிபங்கு உரிமை கொண்டு வந்தவர் கருணாநிதி. அதை விடவா ஒரு சிறந்த விஷயத்தை சொல்ல முடியும்? அவர் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ஸ்டாலின்தான் என்று நடிகர் சத்யராஜ் அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார். மேலும் கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது குறித்து சத்யராஜ் கண்ணீர் விட்டு அழுதபடி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

சற்று முன்