வழக்கமாக பண்டிகை காலங்களில் ரிலீஸாகும் படங்கள் என்றாலே ரசிகள்கள் மத்தியில் அபரிமிதமான எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் மாஸ் ஹீரோக்கள் நடி்தத படங்கள் என்றால் நிச்சயமாக தியேட்டர்களில் கூட்டம் அள்ளிவிடும். படம் ரிலீஸான ஒரு வாரத்துக்குள் 100 கோடி ரூபாய் வசூலை மிக சுலபமாக எட்டி விடும்.
அந்த வகையில் கடந்த 31ம் தேதி ரிலீஸான தீபாவளி படங்களில் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் நடித்த டாப் ஸ்டார் படங்கள் எதுவும் இல்லை. அதே போல் சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் போன்ற இயக்குனர்களின் பண்டிகை கால படங்களும் வரவில்லை. மொத்தமாக ரிலீஸான தீபாவளி பண்டிகை படங்கள் 4 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த அமரன் படம், ஆரம்பத்தில் இருந்தே நிறைய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஏற்கனவே இது தெரிந்த கதை தான் என்றாலும், நடிப்பிலும் இயக்கத்திலும் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனங்களை வென்றது. இதுவரை 250 கோடி ரூபாய் கடந்து வசூல் சாதனை புரிந்துள்ளது.
அடுத்து துல்கர் சல்மான் நடித்த தெலுங்கு படத்தின் டப்பிங் தமிழில் லக்கி பாஸ்கர் வெளியானது. இந்த படத்தில் தெலுங்கு படங்களுக்கே உரிய மசாலா தனம் சிறிதும் இல்லை. கத்தி, ரத்தம் என வன்முறை இல்லை, அதிரடி சண்டை காட்சிகள் இல்லை, ஆனால் இந்த படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு வெற்றிப்படமாக இதுவரை ரூ. 96 கோடி வசூலை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
தீபாவளிக்கு வெளியான கவின் நடித்த பிளடி பெக்கர் படம், தியேட்டர்களுக்கு வந்த வேகத்திலேயே காணாமல் போய்விட்டது. முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சொன்ன விமர்சனங்கள், படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விட்டது. பிளடி பெக்கர் திரையரங்குகளை உடனடியாக அமரன், லக்கி பாஸ்கர் படங்கள் மாற்றப்பட்டு, ரசிகர்களை சேர்த்தனர்.
இந்த சூழலில் மிகவும் பரிதாபகரமான வசூலில் மிகவும் பின்தங்கியது ஜெயம் ரவி நடித்த பிரதர் படம்தான். அமரன் 250 கோடி ரூபாய், லக்கி பாஸ்கர் 96 கோடி ரூபாய் என வசூலில் சிகரங்களை தொட்டுவரும் நிலையில், இந்த படம் இதுவரை ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது. மலையாள நடிகர் நடித்த படத்துக்கு தமிழ் நாட்டில் கிடைத்த வரவேற்பு கூட, ஜெயம் ரவி படத்துக்கு கிடைக்கலையே என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.





